தெலங்கானாவில் இடைத்தேர்தல்; பாஜக பெண் கவுன்சிலர் காரில் ரூ 1 கோடி பறிமுதல்: வாக்காளர்களுக்கு விநியோகிக்க திட்டமா?

திருமலை: தெலங்கானாவில் நடைபெற உள்ள இடைத்தேர்தலை முன்னிட்டு நடத்திய வாகன தணிக்கையில் பாஜக பெண் கவுன்சிலரின் காரில் கொண்டு சென்ற ரூ1 கோடியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது வாக்காளர்களுக்கு வழங்க கொண்டு செல்லப்பட்டதா என விசாரணை நடந்து வருகிறது.தெலங்கானா மாநிலம் முனுகோட் சட்டமன்ற தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்தவர் ராஜ்கோபால். இவர் சில மாதங்களுக்கு முன்பு தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்தார்.இதையடுத்து காலியாக உள்ள அந்த சட்டமன்ற தொகுதிக்கு அடுத்த மாதம் 3ம்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பாஜக சார்பில் ராஜ்கோபால் மீண்டும் களம் காண்கிறார். அவரை எதிர்த்து ஆளும் டிஆர்எஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளும் வேட்பாளர்களை களம் இறக்கியுள்ளன. இடைத்தேர்தல் நெருங்கி வரும் வேளையில் முனுகோட் பகுதியில் வாக்காளர்களை கவரும் வகையில் பரிசுப்பொருட்கள், தடபுடல் விருந்துகள் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக வீடுவீடாக பணம், எவர்சில்வர் பாத்திரங்கள் மற்றும் ஆங்காங்கே திருமண மண்டபங்களில் பிரியாணி, மது ஆகியவையும் வழங்கப்பட்டு வருகிறது. வாக்காளர்களுக்கு பிரதான கட்சியினர் தாராளமாக செலவு செய்து வருகின்றனர். இதுகுறித்து தகவலறிந்த தேர்தல் ஆணையம் பறக்கும்படையினரை களம் இறக்கி 24 மணிநேர சோதனையை தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில் நேற்றிரவு முனுகோடு மண்டலம் சல்மேடு சோதனை சாவடியில் பறக்கும்படையினர் வாகன சோதனை நடத்தினர். அப்போது நம்பர் பிளேட் இல்லாத கார் ஒன்று வந்தது. அதனை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். பின்னர் அந்த காரில் ேசாதனை செய்தனர். காரில் கட்டுக்கட்டாக 1 கோடி பணம் இருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக விசாரணை நடத்தியதில் அந்த பணம் வார்டு பாஜக பெண் கவுன்சிலர் ஒருவருக்கு சொந்தமானது என தெரியவந்தது. மேலும் இதற்கான உரிய ஆவணங்கள் இல்லை என்றும் தெரிகிறது. எனவே இந்த பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், வாக்காளர்களுக்கு கொடுக்க கொண்டு செல்லப்பட்டதா? என விசாரித்து வருகின்றனர்….

The post தெலங்கானாவில் இடைத்தேர்தல்; பாஜக பெண் கவுன்சிலர் காரில் ரூ 1 கோடி பறிமுதல்: வாக்காளர்களுக்கு விநியோகிக்க திட்டமா? appeared first on Dinakaran.

Related Stories: