வேட்பாளருக்கு ஓட்டு கேட்டால் அரசியல் பிரவேசமா? சமந்தா உர்ர்...

யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென தெலுங்கு தேசம் வேட்பாளர் அனகானி சத்ய பிரசாத்துக்கு ஓட்டு போடும்படி கேட்டார் சமந்தா. சமூக வலைத்தளங்கள் மூலம், ‘சத்ய பிரசாத் நல்ல வேட்பாளர். அவரை எனக்கு நல்லா தெரியும். மக்களுக்கு நல்லது செய்யக்கூடியவர். அவருக்கு வாக்களியுங்கள்’ என சில நாட்களுக்கு முன் வீடியோ வெளியிட்டார் சமந்தா. இதையடுத்து ரசிகர்களும் நெட்டிசன்களும் அவரை கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்துவிட்டனர்.

‘உங்களுக்கும் அரசியல் ஆசை வந்துவிட்டதா?’, ‘நடிகர், நடிகைகளுக்கு வேறு வேலையே இல்லையா’, ‘நீங்களுமா?’ என கன்னாபின்னாவென கமென்ட்டுகள் குவிய, சமந்தா கொதித்துப்போனார். இது பற்றி அவர் கூறும்போது, ‘சத்ய பிரசாத், எனது தோழி டாக்டர் மஞ்சுளாவின் சகோதரர். நான் ஐதராபாத்துக்கு வந்தது முதல் அவர்களை தெரியும். நட்பு அடிப்படையில் கோரிக்கை வைத்தால் அரசியலில் குதித்துவிட்டேன் என அர்த்தமா?’ என்றார்.

× RELATED தினகரன் கோழைத்தனமாக அரசியல் செய்வதாக...