×

தமிழுக்கு வருகிறது பதாய் ஹோ

இந்தியில் வெளியான பிங்க் படம், ஸ்ரீதேவி கணவர் போனிகபூர் தயாரிப்பில் நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் தமிழில் ரீமேக் ஆகிறது. வினோத் இயக்குகிறார். அஜித், வித்யாபாலன், ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கின்றனர். இந்நிலையில், இந்தியில் வெளியான பதாய் ஹோ படத்தின்  ரீமேக் உரிமையை வாங்கியுள்ளார், போனிகபூர்.  

இதில் ஆயுஷ்மான் குரானா, சான்யா மல்ஹோத்ரா, நீனா குப்தா நடித்துள்ளனர். அமித் ஷர்மா இயக்கியுள்ளார். இந்தக் கதை தென்னிந்திய கலாசாரத்துக்கு பொருத்தமாக இருக்கும் என்பதால் அதன் தென்னிந்திய உரிமையை பெற்றுள்ளதாகவும், விரைவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளின் ரீமேக் பணிகள் தொடங்கப்படும் என்றும் படக்குழு தெரிவித்தது.

Tags : PADIHO ,
× RELATED நடிகர் சித்தார்த் மற்றும் பாலிவுட்...