×

அகமது இயக்கத்தில் ஜெயம் ரவி

ஜெய் நடிப்பில் வாமனன், ஜீவா, விநய், திரிஷா நடிப்பில் என்றென்றும் புன்னகை, உதயநிதி ஸ்டாலின் நடித்த மனிதன் படங்களை இயக்கியவர் அகமது. இவர் அடுத்து இயக்க உள்ள படத்தில் ஜெயம் ரவி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். படத்துக்கு தலைப்பு இன்னும் வைக்கவில்லை. இது ஜெயம் ரவி நடிக்கும் 25வது படமாகும்.

இதற்கிடையே அறிமுக டைரக்டர் பிரதீப் ரங்கநாதன் இயக்கும் கோமாளி படத்திலும் ஜெயம் ரவி நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே நடிக்கிறார்கள். யோகி பாபு, கே.எஸ்.ரவிக்குமார் உள்பட பலர் நடிக்கிறார்கள்.

Tags : Jayam Ravi ,Ahmed ,
× RELATED ஜெயம் ரவியின் ஜீனி செகண்ட்லுக் வெளியீடு