இன்னும் நான் வெற்றி பெறவில்லை; ராதிகா ஆப்தே ஆதங்கம்

கபாலி, டோனி, ஆல் இன் ஆல் அழகுராஜா போன்ற பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் நடிகை ராதிகா ஆப்தே. இந்தி மற்றும் ஆங்கில படங்களிலும் நடித்து வருகிறார். பிரிட்டிஷ், அமெரிக்க படமாக உருவான, தி வெட்டிங் கெஸ்ட் படத்தில் நடித்ததுடன் லைடியா டீன் உருவாக்கும் வேர்ல்டு வார் 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். கோலிவுட், பாலிவுட் தாண்டி ஹாலிவுட் படங்களில் நடித்து வந்தாலும் தான் நினைத்தபடி இன்னும் வெற்றி பெறவில்லை என்று தனது ஆதங்கத்தை வெளியிட்டிருக்கிறார் ராதிகா ஆப்தே.

இதுபற்றி அவர் கூறியதாவது: நான் நடித்திருக்கும் தி வெட்டிங் கெஸ்ட் படம் சமீபத்தில் அமெரிக்காவில் வெளியானது. இதையடுத்து மேலும் சில ஹாலிவுட் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்திருக்கிறது. அதற்கான ஸ்கிரிப்ட் படித்து வருகிறேன். புதிய படத்தில் நடிப்பது பற்றி விரைவில் முடிவு செய்வேன். எல்லா மொழிகளிலும் முன்னணி ஹீரோ, ஹீரோயின்களுடன் நடிக்க ஆசைப்படுகிறேன்.

என்னைப்பொறுத்தவரை மற்றவர்கள் வெற்றி என்று எதை நினைக்கிறார் களோ அதிலிருந்து நான் நினைக்கும் வெற்றி மாறுபட்டதாக உள்ளது. இன்று வரை வெற்றி பெற்ற ஹீரோயினாக என்னை நான் உணரவில்லை. என் மனதுக்குள் என்ன நினைத்திருக்கிறேனோ அந்த சாதனையை இன்னும் செய்ய வில்லை. அதற்கான நேரம் வரும்போதுதான் நான் வெற்றி பெற்றதாக உணர்வேன். இவ்வாறு ராதிகா ஆப்தே கூறினார்.

Related Stories: