தணிக்கை குழு மீது வழக்கு தொடர இயக்குனர் முடிவு

பரபரப்பான உண்மை சம்பவங்களை மையமாக கொண்ட ஒரு சில படங்கள் திரைப்பட தணிக்கை குழுவின் சான்றிதழ் (சென்சார் சர்டிபிகேட்) பெறுவதற்கு சிக்கல் ஏற்படுகிறது. தமிழில் ஜல்லிகட்டு சம்பந்தமான ஒரு படம் தணிக்கை குழு சான்றிதழ் கிடைக்காமல் போராடி வருகிறது. தெலுங்கில் என்டி.ராமராவுடன் தொடர்பில் இருந்த லட்சுமி பார்வதி வாழ்க்கை படமாக ‘லக்‌ஷ்மிஸ் என்டிஆர்’ உருவானது. இப்படத்தை இயக்குனர் ராம் கோபால் வர்மா டைரக்டு செய்துள்ளார்.

படம் முடிவடைந்ததையடுத்து இம்மாதம் திரையிட திட்டமிடப்பட்டிருக்கிறது. ஆனால் தணிக்கை குழு இப்படத்துக்கு சான்றிதழ் வழங்கு மறுத்துள்ளது. தேர்தல் சமயமாக உள்ளதால் இப்படத்தை வெளியிடுவதற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க தேர்தல் கமிஷனின் அனுமதியை பெற வேண்டும் என தணிக்கை குழு அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். இதற்கு ராம் கோபால் வர்மா எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.

அவர்கூறும்போது, தணிக்கை குழுவின் பணி என்பது படத்தை பார்த்து அதில் ஆட்சேபத்துக்குரிய காட்சிகளை நீக்குவதற்கான கட்ஸ் (வெட்டு) கொடுக்க வேண்டியதுதான். அதைவிடுத்து தேர்தல் கமிஷன் அனுமதியை பெற்றால்தான் தணிக்கை சான்றிதழ் தர முடியும் என்பது தணிக்கை குழுவின் அதிகாரத்துக்கு உட்பட்ட விஷயமல்ல. தணிக்கை குழுவின் சட்டவிரோதமான இந்த போக்கை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தொடர்வேன்’ என தெரிவித்துள்ளார்.

Related Stories: