×

‘‘ஸ்ரீராம ராஜ்யம்’’

நன்றி குங்குமம் ஆன்மிகம்

(ஸ்ரீராம நவமி - 30.3.2023)

ஆதியில் பாரதமெங்கும் சூரிய குல வேந்தர்களே மேலோங்கியிருந்தார்கள். ஸ்ரீராம பிதரனின் தந்தையான தசரதர் ஒருவரே ‘‘சக்கரவர்த்தி’’ என்று பட்டம் பெற்று மற்ற அரசர்கள் யாவராலும் வணங்கப் பெற்றார். அந்த காலத்தில் அரசாட்சி ‘மனுதர்ம’ சாஸ்திரத்தின் அடிப்படையிலேயே நடைபெற்றது. அதனால் ராமாயண காலத்தில் சீரும் சிறப்புமாக இந்த ஆட்சி ‘ராம ராஜ்யம்’ என்ற பெயரால் போற்றப்பட்டது. எனவே தான் நமது தேசப்பிதா மகாத்மா காந்தியடிகள் நமது நாட்டிற்கு ‘ராமராஜ்யம்’ வேண்டும் என்று சொல்லி வந்தார்.

அதற்கு சிறந்த அரசனே தேவை. அனைத்து வல்லமையும் பெற்ற தசரதமன்னர் ஒருவரே சிறந்த அரசன் என்கிறார் வால்மீகி முனிவர். செங்கோல் செலுத்தும் அரசனிடம் அமைய வேண்டிய நற்குணங்கள் என்னென்ன என்பதை வால்மீகி முனிவர் தமது காவியத்தில் தசரதரை வர்ணிக்கும் போது பின்வருமாறு போற்றிப் பாராட்டுப் பட்டயம் அளிக்கிறார்.

அதாவது, ‘‘அவர் நால்வேதமும் அறிந்தவர் என்பதால் ‘‘வேதவித்’’ என்றும், அவர்யுத்தத்தில் எப்போதும் வெற்றியே கண்டவர் என்பதால், ‘‘ஸத்ய ஸங்கர’’ என்றும், அவர் நீடிய நோக்குக் கொண்டவர் என்பதால், ‘‘தீர்க்க தர்சி’’ என்றும், அவர் மிகுந்த ஆற்றல் பெற்றவர் என்பதால். ‘‘மஹா தேஜா’’ என்றும், அவர் எல்லோராலும் நேசிக்கப்பட்டவர் என்பதால், ‘‘பௌர ஞான பதப்ரியா’’ என்றும், அவர் அறநெறி வழுவாதவர் என்பதால், ‘‘தர்மபர’’ என்றும், அவர் சொன்ன சொல் தவறாதவர் என்பதால், ‘‘ஸத்யா பிஸந்த்’’ என்றும், அவர் அறம், பொருள், இன்பம் மூன்றையும் முறைப்படி அனுஷ்டித்தவர் (கடைப்பிடித்தவர்) என்பதால், ‘‘த்ரிவர்காளுஷ்டதா’’ என்றும் போற்றப்பட்ட பல நற்குணங்கள் உடைய தசரத மன்னரால் மட்டுமே ராம ராஜ்யம் சாத்தியமாயிற்று!’’ என்கிறார் வால்மீகி முனிவர்!

தொகுப்பு: டி.எம். ரத்தினவேல்

Tags : Kingdom of ,
× RELATED நிழல் ராஜ்ஜியம்: தென் ஆப்ரிக்காவில் அதிபரையும் மிஞ்சிய குப்தா சகோதரர்கள்