காஷ்மீர் அழகிகள் நடிக்கும் தமிழ் படம்

தமிழில் பட டைட்டிலுக்கு பஞ்சம் வந்தாலும் வந்தது, சாதாரண பேச்சு வழக்கு வசனங்களும் தற்போதைக்கு தலைப்பாக வைக்கப்படுகிறது. தலைப்பை கேட்டாலே சும்மா சிரிப்பு வருதுல்ல என்று சொல்லும்படியாக ‘உனக்கெல்லாம் எதுக்கு பேண்ட் சர்ட்’ என புதிய படத்துக்கு டைட்டில் வைக்கப்பட்டிருக்கிறது. இயக்குனர் என்ற படத்தை எழுதி இயக்கி தயாரித்து நடித்த ரஜத் இப்படத்தை இயக்கி நடிக்கிறார். படம் பற்றி அவர் கூறும்போது,’ காமெடி, ஆக்‌ஷன் கலந்த கதையாக இப்படம் உருவாகிறது.

காஷ்மீரை சேர்ந்த அழகிகள் இஷிதா, ஷாகில், ஷெல்சி, கீரா, மும்பையை சேர்ந்த சரவணன், ஜாஸ்பர், சிம்லா விஷால், புனேவை சேர்ந்த சோனா மற்றும் சென்னையை சேர்ந்த ரோஸ் ஆகியோருடன் கஞ்சா கருப்பு நடிக்கிறார். ஹீரோவாக நடித்து படத்தை ஒளிப்பதிவு செய்து இயக்கும் பொறுப்பை நான் (ரஜத்) ஏற்றிருக்கிறேன். சிம்லா, மும்பை, கோவா, மகாபலிபுரம் போன்ற இடங்களிலும் மற்றும் சீனா, தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளிலும் இதன் படப்பிடிப்பு நடக்க உள்ளது’ என்றார் ரஜத்.

× RELATED ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட...