ரசிகர்கள் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை இல்லையா? வம்பிழுத்தவர்களுக்கு சமந்தா பதில்

ஜங்க் புட் விளம்பர படம் ஒன்றில் நடித்ததற்கு சமந்தாவை ரசிகர்கள் விமர்சித்துள்ளனர். ‘நீங்கள் ஜங்க் புட் எதையும் சாப்பிடாமல் உங்கள் உடலை ஆரோக்கியமாகவும், ஸ்லிம்மாகவும் பராமரிக்கிறீர்கள். ஆனால் ஜங்க் புட் விளம்பர படங்களில் நடித்து உங்கள் ரசிகர்களை அதனை வாங்கி சாப்பிட தூண்டுகிறீர்களே, ரசிகர்களின் உடல்நலனில் உங்களுக்கு அக்கறை கிடையாதா, நீங்கள் செய்வது நியாயமா? என கேட்டுள்ளனர். அதற்கு பதில் அளித்துள்ள சமந்தா,’நான் எதை சாப்பிடுகிறேனோ அதற்கு தான் விளம்பரம் செய்கிறேன்.

நான் எல்லாவற்றையும் சாப்பிடுவேன் அதேசமயம் கடுமையான உணவு கட்டுப்பாடு பராமரிப்பேன்’ என குறிப்பிட்டுள்ளார். நட்சத்திர காதல் தம்பதிகள் சமந்தா, நாக  சைதன்யா சந்தோஷமாக வாழ்க்கையை அனுபவித்து வருகின்றனர். ஆனாலும்  இருவருக்குள்ளும் ஒரு வித்தியாசம் காணப்படுகிறது. சமூக வலைதள பக்கங்களில்  அதிக ஆர்வம் காட்டுபவர் சமந்தா, நாக சைதன்யா அப்படி இல்லை.

முக்கியமான  நேரங்களில் மட்டுமே சமூக வலைதளங்களில் கருத்துக்களை பகிர்கிறார் சைதன்யா.  சமந்தாவின் சமூக வலைதள ஆர்வத்தை கண்டு சில சமயம் நாக சைதன்யா  கோபப்படுகிறாராம். இதுபற்றி சமந்தா கூறும்போது, ‘திரையில் தான் நம்மை  ரசிகர்கள் பார்க்கிறார்கள். நம் சொந்த வாழ்க்கையையும் படம் பிடித்து சமூக  வலைதளங்களில் அவர்கள் பார்க்க வேண்டுமா? என்று நாக சைதன்யா கேட்கிறார்.  அதனால் அவர் என் அருகில் இருக்கும்போது இன்ஸ்டாகிராம், டுவிட்டர் எதையும்  தொட மாட்டேன்’ என்றார் சமந்தா.

× RELATED ரசிகர்களை வளைத்து போட சமந்தா - காஜல் அகர்வால் கடும் போட்டி