ரஜினியோடு நடிக்க மறுத்தவருடன் ஜோடி சேருகிறார் கீர்த்தி

ரஜினி நடித்த 2.0 படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனை அணுகினார் இயக்குனர் ஷங்கர். ஆனால் மற்றொரு முறை பார்க்கலாம் என்று கூறி நைசாக நழுவினார் அஜய். அதன் பிறகு 2.0 படத்தில் அக்‌ஷய்குமார் வில்லன் வேடம் ஏற்று நடித்தார். இந்நிலையில் இந்தியில் நடிக்க நடிகை கீர்த்தி சுரேஷுக்கு அழைப்பு வந்தது. அவரும் அதை ஏற்றிருக்கிறார். அஜய் தேவ்கன் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி நடிக்க உள்ளார்.

கீர்த்தி நடிக்கும் முதல் இந்தி படமாக உருவாகவுள்ள இப்படம் இந்திய கால்பந்து அணி பயிற்சியாளர் சையத் அப்துல் ரஹீமின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட உள்ளது. சையத் வேடத்தில் அஜய் தேவ்கன் நடிக்க உள்ளார். அவருக்கு ஜோடியாக கீர்த்தி நடிக்கிறார்.

சையத் அப்துல் தலைமையிலான இந்திய அணி கடந்த 1956ம் ஆண்டு மெல்போர்ன் ஒலிம்பிக்கில் இந்திய கால்பந்து அணி அரையிறுதி வரை சென்றது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே நடிகை சாவித்ரி வாழ்க்கை வரலாறாக உருவான நடிகையர் திலகம் படத்தில் சாவித்ரி வேடம் ஏற்று கீர்த்தி நடித்தது வரவேற்பை பெற்றது. அந்த சென்டிமென்ட் கால்பந்து வீரரின் வாழ்க்கை படமாக உருவாகும் இதிலும் ஒர்க்அவுட் ஆகும் என்று பட தரப்பினர் ஆசை வெளிப் படுத்தி உள்ளனர்.

× RELATED மீண்டும் காதல் ஜோடியாகும் நட்சத்திர தம்பதி