×

தெளிவு பெறுஓம்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

? சுக்கிர தசை அடிக்கிறது என்கிறார்கள். சுக்கிராச்சார் யார் அசுரர்களின் குரு அல்லவா? அசுர குருவான அவர் போய், எப்படி வாழ்க்கையில் வளம் காட்டுவார்?


தேவ குருவுக்குக்கூடத் தெரியாத சஞ்ஜீவினி மந்திரம் தெரிந்தவர். அதன் மூலம், இறந்தவர்களைப் பிழைக்கச் செய்பவர். தவம், கல்வி ஆகியவற்றில் தலைசிறந்தவர். சிவபக்தி மிகுந்தவர். தான் இழந்திருந்த கண் பார்வையைக் கடும்தவம் செய்து, சிவபெருமானிடம் இருந்து பெற்றவர். எனப் பல்வேறு விதங்களில் புகழ்பெற்றவர்  சுக்கிராச்சார்யார்.

‘தாரா’ என்ற சொல், நட்சத்திரங்களில் இரண்டை மட்டும் குறிக்கும் என்பார்கள். சுக்கிரன் - செவ்வாய் என்பவையே அவை. அடுத்தது, இந்த அண்டத்தையே அம்பிகையின் திருவடிவாகக் கொண்டால், அந்த அம்பிகை அணியும் இரு மூக்குத்திகள் வெள்ளியும் செவ்வாயும். வெள்ளைக்கல் மூக்குத்தி - வெள்ளி. சிவப்புக்கல் மூக்குத்தி - செவ்வாய். இதன் காரணமாகவே செவ்வாய் - வெள்ளி அம்பாளைப் பூஜை செய் என்றார்கள். அதிலும் குறிப்பாக வெள்ளிக்கு ஏற்றம் கொடுத்து, வெள்ளிக்கிழமை அம்பாள் வழிபாடு என்றே சொல்லி வைத்தார்கள்.

சுக்கிரதசை அடிக்கட்டும்! சுபீட்சங்கள் வளரட்டும்!? ஆலயங்களில் உள்ள துவஜ ஸ்தம்பத்தின் (கொடிமரம்) பொருள் என்ன?

உள்ளம் பெருங் கோயில் ஊன் உடம்பு ஆலயம்
வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்
தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவ லிங்கம்
கள்ளப் புலன் ஐந்தும் காளா மணி விளக்கே


- எனும் திருமூலர் வாக்கின் படி, நம் உடம்பை ஆலயமாகக் கொண்டால் முதுகுத்தண்டு என்பதே கொடிமரம். தண்டு வடத்தின் வழியாகச் சுற்றித் தழுவி, மேலே எழும்பும் குண்டலினி சக்தியையே கொடி மரம் உணர்த்துகிறது. ஆலயங்களில் விழாவின் போது, கொடி ஏற்றுவார்கள். தெய்வம் வெளிப்படும். குண்டலினி சக்தி மேலே ஏறி ஆறு ஆதாரங்களையும் தாண்டியவுடன், சொல்ல முடியாத இன்ப அனுபவம் வெளிப்படும். இதுவே தெய்வீக நிலை. இதை உணர்த்துவதற்காகவே, ஆலயங்களில் கொடிமரம் இடம் பெற்று உள்ளது.

மேலும், கருவறையில் உள்ள தெய்வவடிவங்களுக்கு மந்திரங்களைச் சொல்லி வழிபாடு செய்யும் போது, அந்த மந்திரங்களின் அதிர்வுகள் மூல விக்கிரகத்தின் அடியில் உள்ள யந்திரங்களில் சேரும்.அந்த அதிர்வு, ஆற்றல் பொங்கி வழியும். அந்த அதிர்வு ஆற்றல்களைக் கொடிமரம் அப்படியே உள்வாங்கி, கிரகித்துப் பெருமளவில் சேமித்து வைத்திருக்கும். கொடி மரத்தின் அடியில் நாம் விழுந்து வணங்கும்போது, அதில் உள்ள அதிர்வலைகள் அப்படியே நம் தலைவழியாக உடலில் பரவும். நலம் பெறுவோம். இதை நாம் அடைய வேண்டும் என்பற்காகவே ‘கொடி மரத்தின் அடியில் விழுந்து வணங்க வேண்டும். அதைத் தாண்டிவிட்டால் ஆலயத்தின் எந்தச் சந்நதியிலும் விழுந்து வணங்கக்கூடாது’ என ஆகமங்கள் சொல்கின்றன.

?  அஷ்ட லட்சுமிகள் என்று எட்டு விதமாகத் திருமகளை சொல்வது போல, சரஸ்வதி தேவிக்கு உண்டா?

உண்டு. அம்பிகைக்கு, ஸ்ரீசக்கரம் என்று சொல்கிறோம் அல்லவா? அதில் ஒன்பது சுற்றுக்கள் உள்ளன. அவற்றை ஆவரணங்கள் என்பார்கள். அவைகளின் உள் சுற்றின் நடுவில், பிந்து மண்டலத்தில் அம்பிகை வீற்றிருக்கிறார். மற்ற எட்டு சுற்றுகளிலும் வாக்குத் தேவதைகள் எனப்படும் எட்டு விதமான சரஸ்வதிகள் எழுந்தருளி இருக்கிறார்கள். அந்த எட்டு சரஸ்வதிகளின் திருநாமங்கள்: வசினி, காமேஸ்வரி, மோதினி, விமலா, அருணா, ஜயினி, சர்வேஸ்வரி, கௌலினி என்பவை.

தொகுப்பு: சந்திரமௌலி

Tags :
× RELATED சுந்தர வேடம்