வழூரில் ஸ்ரீசேஷாத்திரி சுவாமிகள் ஜெயந்தி

நன்றி குங்குமம் ஆன்மிகம்

10.2.2023 -  வெள்ளி

திருவண்ணாமலை என்றாலே யோகிகள் சன்னியாசிகள் ஞானிகள் வாழ்ந்த இடம். வாழ்ந்து கொண்டிருக்கும் இடம். அங்கே இருக்கும் அண்ணாமலை கோயிலைச் சுற்றியும், அண்ணாமலையைச்  சுற்றியும் இலட்சக்கணக்கான ரிஷிகளும் யோகிகளும் சித்தர்களும் சூட்சுமமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் திருவண்ணாமலையை  நினைக்கும் பொழுது ரமண மகரிஷி நினைவுக்கு வருவார் அடுத்து சேஷாத்திரி மகரிஷி நினைவுக்கு வருவார் அருணாசலேஸ்வரர், ரமண மகரிஷி, சேஷாத்திரி சுவாமிகள் ஆகியோரை திருவண்ணாமலையின் மூன்று லிங்கங்கள் என்று சொல்வார்கள். இங்கு தனது 19-ம் வயதில் வந்த சேஷாத்திரி சுவாமிகள், மெய்யறிவு பெற்று இறைவனை உணர பக்தி, ஞான வைராக்கியத்துடன், சதா சர்வகாலமும் அந்த புனித மண்ணில் உலவி விட்டு திருவண்ணாமலையிலேயே சித்தியடைந்தார்.

மகான் ஸ்ரீசேஷாத்திரி ஸ்வாமிகளின் ஜெயந்தி விழா 10.2.2023 அன்று, அவர் அவதரித்த தலமான வழூரில் ஸ்ரீசேஷாத்திரி ஸ்வாமிகளுக்கு அபிஷேகம் மற்றும் மஹா தீபாராதனை நடைபெற உள்ளன மேலும், அதன் தொடர்ச்சியாக 14.2.2023 அன்றும் காலை முதல் இரவு வரை  பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. வழூர் எனும் இத்தலம் உத்திரமேரூர் கடந்து வந்தவாசி செல்லும் வழியில் அமைந்துள்ளது.

தொகுப்பு: கதிர்செந்திலரசு

Related Stories: