அருண் பாண்டியன் மகள் ஹீரோயினாக அறிமுகம்

நடிகர்,  இயக்குனர், தயாரிப்பாளர் அருண் பாண்டியனுக்கு 3 மகள்கள். அவர்களில் கடைசி மகள் கீர்த்தி பாண்டியன் ஹீரோயின் ஆகிறார். எதிர்நீச்சல், காக்கி சட்டை  படங்களின் இயக்குனர் துரை.செந்தில்குமாரின் உதவியாளர் மற்றும் கொடி படத்துக்கு திரைக்கதை எழுதியவரான ஹரீஷ் ராம் இந்தப் படத்தை இயக்குகிறார். கமர்ஷியல் கதை கொண்ட இதில் ‘கனா’ தர்ஷன் ஹீரோவாக நடிக்கிறார். அவரது ஜோடியாக  நடிக்கும் கீர்த்தி பாண்டியன் கூறியதாவது:

கடந்த 3 வருடங்களாக 20க்கும் மேற்பட்ட தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி மேடை நாடகங்களில் நடித்திருக்கிறேன். சில குறும்படங்களில் நடித்த  அனுபவமும் உண்டு. பி.எஸ்.சி எலெக்ட்ரானிக் மீடியா படித்திருந்தாலும்,  தந்தை மற்றும் சகோதரி கவிதா வழியில் சினிமா துறையில் ஈடுபட விரும்பினேன். குடும்பத்தில் ஆதரவு கிடைத்தது. இதற்குமுன் அப்பாவுடன் இணைந்து சினிமா விநியோகத்துறையில் ஈடுபட்டிருந்தேன். இப்போது ஹீரோயினாகி விட்டேன் என்றார்.

× RELATED காடையாம்பட்டி அருகே பணிபுரியும் அரசு...