ஹாலிவுட் டப்பிங் படத்துக்கு முருகதாஸ் வசனம்

அவஞ்சர்ஸ் பட வரிசையில், அவஞ்சர்ஸ்: என்ட்கேம் என்ற ஹாலிவுட் படம் தயாராகி இருக்கிறது. ராபர்ட் டவுனி ஜூனியர், கிறிஸ் ஹெம்ஸ்வொர்த், மார்க் ரூபலோ, கிறிஸ் எவான்ஸ் நடித்துள்ளனர். அந்தோணி ரூசோ, ஜோ ரூசோ இயக்கியுள்ளனர். வரும் ஏப்ரல் மாதம் ஆங்கிலம், தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் படம்  வெளியாகிறது.

தமிழ் பதிப்புக்கான வசனத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்  எழுதுகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘சூப்பர் ஹீரோ படங்களை எனக்கு  ரொம்ப பிடிக்கும். அவஞ்சர்ஸ் படத்தின் ஒரிஜினல் தன்மை மாறாதபடி தமிழில் வசனம் எழுதியுள்ளேன்’ என்றார்.

× RELATED தர்பாரில் என்னென்ன மாதிரி பஞ்ச் டயலாக்; ரசிகர்கள் எதிர்பார்ப்பு