பெப்சி தலைவராக மீண்டும் ஆர்.கே.செல்வமணி தேர்வு

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் (பெப்சி) 2019-2021ம் ஆண்டின் புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல், நேற்று சென்னை வடபழநியில் உள்ள அலுவலகத்தில் நடந்தது. தற்போதைய தலைவராக இருக்கும் இயக்குனர் ஆர்.கே.செல்வமணி மீண்டும் போட்டியிட்டார். அவரை எதிர்த்து ஒப்பனைக்கலைஞர்கள் சங்கம் சார்பில் மூர்த்தி போட்டியிட்டார்.

மாலையில் வாக்குகள் எண்ணப்பட்டு, ஆர்.கே.செல்வமணி வெற்றிபெற்று, மீண்டும் பெப்சி தலைவரானார். பொதுச்செயலாளராக அங்கமுத்து சண்முகம், பொருளாளராக சுவாமிநாதன் வெற்றிபெற்றனர். துணை தலைவர்கள் மற்றும் துணை செயலாளர்கள் பதவிகளுக்கு தலா 5 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

× RELATED பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட...