நன்றி குங்குமம் ஆன்மிகம்
இந்திரத்யும்னன் எனும் ஒரு அரசன், திருமாலிடம் மிகுந்த பக்தி பூண்டு ஒழுகியவன். ஒருநாள் அவன் வழிபாட்டில் இருந்த வேளையில், அகத்திய முனிவர் வந்தார். வந்த முனிவரை அரசன் கவனிக்கவில்லை. வணங்கவுமில்லை. இதனால் வெகுண்ட அகத்தியர், அரசனை ஆனையாவாய் என்று சபித்துவிட்டார். யானையான அரசன், பொய்கையிலுள்ள அழகிய தாமரை களைக் கொண்டு தினமும் திருமாலை வழிபட்டு வந்தார்.
தேவலர் என்னும் முனிவர், தண்ணீரில் நின்று தவம் செய்துகொண்டிருந்தார். ‘ஹு ஹு’ என்னும் கந்தருவன் கர்வம் கொண்டு, மறைந்திருந்து அவருடைய காலைப் பற்றி இழுத்தான். முனிவர் அவனைச் சபிக்கவே அவன் முதலையானான். ஒரு மடுவில் முதலை வடிவில் தங்கியிருந்தான். மடுவில் மலர்ந்திருந்த தாமரையை பறிக்க யானை இறங்கியபோது முதலை வடிவினன், யானையின் காலைப் பற்றிக்கொண்டான்.
திருமாலைச் சரணடைந்த யானை;‘‘நாராயணா.. ஓ.. மணிவண்ணா கணையாயவாராய என ஆரிடரை நீக்காய’’என்று வாரணன் (யானை) அழைக்கக் காரணன் (திருமால்) கருடன் மீதேறிச் சென்று சுதர்சன வாளைக் கொண்டு முதலையைக் கொன்று யானையைக் காத்தார்.
இதனைத் தேசிகரின் நவமணிமாலையில்;மையுமாகட லுமயிலுமா மழையுமணிகளுங்கு வளையுங்கொண்டமெய்யனே அடியோர் மெய்யனே விண்ணோரீசனே நீசனேனடைந்தேன்கையு மாழியுமாய்க் களிறு காத்தவனேகாலனார் தமரெனைக் கவராதுஇயனே வந்தன் றஞ்சலென் றருடென்னயிந்தைமா நகர மர்ந்தானே. - என்று காணலாம்.
தொகுப்பு: அருள் ஜோதி