×

ஆனையின் துயர் போக்கிய ஆழி

நன்றி குங்குமம் ஆன்மிகம்

இந்திரத்யும்னன் எனும் ஒரு அரசன், திருமாலிடம் மிகுந்த பக்தி பூண்டு ஒழுகியவன். ஒருநாள் அவன் வழிபாட்டில் இருந்த வேளையில், அகத்திய முனிவர் வந்தார். வந்த முனிவரை அரசன் கவனிக்கவில்லை. வணங்கவுமில்லை. இதனால் வெகுண்ட அகத்தியர், அரசனை ஆனையாவாய் என்று சபித்துவிட்டார். யானையான அரசன், பொய்கையிலுள்ள அழகிய தாமரை களைக் கொண்டு தினமும் திருமாலை வழிபட்டு வந்தார்.

தேவலர் என்னும் முனிவர், தண்ணீரில் நின்று தவம் செய்துகொண்டிருந்தார். ‘ஹு ஹு’ என்னும் கந்தருவன் கர்வம் கொண்டு, மறைந்திருந்து அவருடைய காலைப் பற்றி இழுத்தான். முனிவர் அவனைச் சபிக்கவே அவன் முதலையானான். ஒரு மடுவில் முதலை வடிவில் தங்கியிருந்தான். மடுவில் மலர்ந்திருந்த தாமரையை பறிக்க யானை இறங்கியபோது முதலை வடிவினன், யானையின் காலைப் பற்றிக்கொண்டான்.

திருமாலைச் சரணடைந்த யானை;


‘‘நாராயணா.. ஓ.. மணிவண்ணா கணையாய
வாராய என ஆரிடரை நீக்காய’’


என்று வாரணன் (யானை) அழைக்கக் காரணன் (திருமால்) கருடன் மீதேறிச் சென்று சுதர்சன வாளைக் கொண்டு முதலையைக் கொன்று யானையைக் காத்தார்.

இதனைத் தேசிகரின் நவமணிமாலையில்;
மையுமாகட லுமயிலுமா மழையு
மணிகளுங்கு வளையுங்கொண்ட
மெய்யனே அடியோர் மெய்யனே விண்ணோ
ரீசனே நீசனேனடைந்தேன்
கையு மாழியுமாய்க் களிறு காத்தவனே
காலனார் தமரெனைக் கவராது
இயனே வந்தன் றஞ்சலென் றருடென்
னயிந்தைமா நகர மர்ந்தானே.


 - என்று காணலாம்.

தொகுப்பு: அருள் ஜோதி

Tags : Azhi ,
× RELATED திருவாரூரில் மார்ச் 15ல் ஆழி தேரோட்டம்...