சமகால அரசியல் பேசும் கண்ணே கலைமானே; உதயநிதி ஸ்டாலின்

சீ னு ராமசாமி இயக்கியுள்ள கண்ணே கலைமானே படம், வரும் 22ம் தேதி ரிலீசாகிறது. இதில் நடித்தது குறித்து உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:
கண்ணே  கலைமானே கதையை கேட்ட தமன்னா, மும்பையில் இருந்து போன் செய்து, இதில்  நீங்கள் நடிக்கப் போகிறீர்களா என்று ஆச்சரியத்துடன் கேட்டார். ஏன் என்றேன்.  எனக்கு இதில் பவர்ஃபுல் கேரக்டர். இதுபோல் ஹீரோயினுக்கு முக்கியத்துவம்  இருந்தால், அதில் நடிக்க எந்த ஹீரோவும் தயங்குவார் என்றார்.

அதுபற்றி நான்  கவலைப்படவில்லை. இயற்கை விவசாயத்தை விரும்பும் கமலக்கண்ணனாக நானும்,  பேங்க் ஆபீசர் பாரதியாக தமன்னாவும் நடித்துள்ளோம். எனக்கு அப்பாவாக பூ  ராமு, பாட்டியாக வடிவுக்கரசி நடித்துள்ளனர். சோழவந்தான் கார்த்திக் என்பவரை  மையமாக வைத்து என் கேரக்டரை சீனு ராமசாமி உருவாக்கியுள்ளார்.

படத்தில்  சமகால அரசியல் குறித்து அதிகமாகப் பேசியிருக்கிறேன். ஆனால், பன்ச் டயலாக்  இருக்காது. அட்வைஸ் மாதிரி இல்லாமல், தேன் தடவிய மருந்து போல் பல  ஆணித்தரமான கருத்துகளை சொல்லியிருக்கிறோம். நீட் தேர்வு, வங்கி விவசாய  கடன் தள்ளுபடி உள்பட நாங்கள் பேசியிருக்கும் பல்வேறு சமூக விஷயங்கள்  ரசிகர்களை சிந்திக்க வைக்கும்.

× RELATED ஆபாச பேச்சு: வாலிபர் கைது