அருண் விஜயுடன் இணையும் ரித்திகா சிங்

நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகிவரும் பாக்ஸர் படத்தில் இறுதிச் சுற்று நாயகி ரித்திகா சிங் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இயக்குநர் சுதா இயக்கத்தில் கடந்த 2016ம் ஆண்டு வெளியான இறுதிச்சுற்று படம் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் ரித்திகா சிங்.

நிஜ வாழ்க்கையில் கிக்-பாக்ஸரான இவர், இறுதிச்சுற்று படத்திலும் பாக்ஸராக நடித்திருப்பார்.அதை தொடர்ந்து ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்பின் தமிழ் படங்களில் வாய்ப்பு கிடைக்காத நிலையில், தெலுங்கு, ஹிந்தியில் நடிப்பதற்கு முயற்சி செய்து வந்தார் ரித்திகா சிங்.

× RELATED பாக்ஸர் படத்திற்காக டாங்கிலியிடம் பயிற்சி பெறும் அருண் விஜய்