27 வருடங்களுக்கு பிறகு ரஜினியுடன் இணையும் பிரபல ஒளிப்பதிவாளர்

2.0', 'பேட்ட' படங்களை தொடர்ந்து ரஜினிகாந்த் அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்த நிலையில், படத்தின் ஒளிப்பதிவாளராக சந்தோஷ் சிவன் ஒப்பந்தமாகியுள்ளார். இதனை அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது "தளபதி படத்திற்கு பிறகு மீண்டும் ரஜினி சாருடன் இணைவதில் மகிழ்ச்சி" என்று தெரிவித்துள்ளார்.

இந்திய சினிமாவில் மிக முக்கியமான ஆளுமைகளில் ஒருவர் சந்தோஷ் சிவன். இவர் ஒளிப்பதிவாளர், இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என பல்வேறு திறன்கள் பெற்றவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, ஆங்கில மொழிப் படங்களில் பங்காற்றியுள்ளார். ஒளிப்பதிவாளராக 5 முறை தேசிய விருது வென்றவர். இவர் இந்திய சினிமாவிற்கு ஆற்றிய பங்கைப் பாராட்டி 2014ஆம் ஆண்டு, பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

× RELATED குறை சொல்பவர் கமல் பாராட்டுபவர்...