×

கூரத்தாழ்வான் எறிந்த பொன்வட்டில்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

கூரத்தாழ்வான் என்னும் அந்தணர், காஞ்சிபுரத்திற்கு வடக்கில் சுமார் 16 கி.மீ., தொலைவில் உள்ள கூரக்கிரகாரத்தில் வாழ்ந்தார். கூரேசா, கூரநாதர் என்றும் புகழ்பெற்ற இவருடைய துணைவி பெயர் ஆண்டாள். தமது அளவற்ற செல்வத்தை ஏழை எளியவர்களுக்கு வாரி வழங்குவதில் செலவிட்டார். இளமையிலிருந்தே, இவர் ராமானுஜரிடம் மிகவும் மதிப்புக் கொண்டிருந்தார். சிறந்த நினைவாற்றல் மிக்கவர். யாதவப் பிரகாசரை வெல்ல இவர் உதவினார்.

கூரத்தாழ்வார், ராமானுஜர் காஞ்சியை விட்டுத் திருவரங்கம் சென்ற பின்பு, செல்வத்திலும் சொத்திலும் இருந்த அக்கரையையும் துறந்துவிட்டார். திருமகளிடம் திருக்கச்சி நம்பி கூரத்தாழ்வானின் பெருமைகளைக் கூறியது கேட்டு திருக்கச்சி நம்பியிடம் அவரைக் காண விரும்புவதாகத் திருமகள் தெரிவித்தார்.

கூரத்தாழ்வார், செல்வம் என்னும் குப்பை தன் உள்ளத்தையும், ஆன்மாவையும் மாசுபடுத்தியுள்ளது எனக் கருதி, விலையுயர்ந்த ஆடைகளைத் துறந்து கந்தையாடையுடன் திருவரங்கம் நோக்கித் தம் துணைவி ஆண்டாளுடன் சென்றபோது, கணவர், தீர்த்தம் அருந்தும் பொன்வட்டில் ஒன்றை மட்டும் அவள் தன் கையில் எடுத்துக் கொண்டார். காட்டில் வழியில் அஞ்சுவதற்கு ஒன்றுமில்லையே என்று ஆண்டாள் கணவரிடம் கேட்டார்.

தம்மிடம் ஒன்றுமில்லை அஞ்சுவதற்கு என்று கூறி, ``பணமோ செல்வமோ இல்லையென்றால் அஞ்சுவதற்கு ஏதுமில்லை’’ என்று கூரத்தாழ்வார் பதில் கூறினார்.ஆண்டாள் இதைக் கேட்டவுடனேயே பொன்வட்டிலைத் தூர வீசி எறிந்தாள். மறுநாள் அவர்கள் திருவரங்கம் சென்று பிட்சையெடுத்து வாழ்ந்தனர். கணவனுக்குப் பணி செய்வதையே லட்சியமாக ஆண்டாள் கொண்டார். கூரத்தாழ்வார் கிருமிகண்ட சோழனால் கண்களை இழந்தார்.

தொகுப்பு: மங்கள முருகேசன்

Tags : Kooratthalwan ,
× RELATED ஏன்? எதற்கு? எப்படி?