இணையதளம் தொடங்கிய தீபிகா

திருமணத்துக்கு பிறகு விளம்பர படங்களில் பிசியாக நடித்து வருகிறார் தீபிகா படுகோனே. சினிமாவிலும் நடிக்க கதைகளை கேட்டு வருகிறார். இந்நிலையில் கணவர் ரன்வீர் சிங் நடிக்கும் 83 படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இது 1983ல் இந்திய கிரிக்கெட் அணி, உலக கோப்பையை வென்றதன் பின்னணியில் உருவாகும் படம். இதில் கபில்தேவ் கேரக்டரில் ரன்வீர் நடிக்கிறார்.

கபிலின் மனைவி வேடத்தில் நடிக்க தீபிகா தேர்வாகியுள்ளார். இதற்கிடையே தனது பெயரில் வெப்சைட் ஒன்றை தொடங்கியுள்ளார் தீபிகா. தன்னைப் பற்றி நிறைய பொய் தகவல்கள் வருவதால் இந்த வெப்சைட் தொடங்கியுள்ளதாக சொல்லும் அவர், இதில் தான் சம்பந்தப்பட்ட முக்கிய தகவல்களை வெளியிடுவாராம்.

× RELATED பாஜ இணையதளத்தை முடக்கிய ஹேக்கர்கள்