×

நாளும் ஒரு கோலம்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

கோலம் உள்ள இடத்தில் தெய்வம் வாசம் செய்யும்’’ என்பது சான்றோர் வாக்கு. ஆம்! நமது இல்லங்களில் அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் (4am - 6am) வாசல் தெளித்து கோலம் போட்டால், நமது இல்லங்களில் ஸ்ரீமஹாலட்சுமி வாசம் செய்வாள் என்று வேதத்தில் சொல்லப்படுகிறது. எனவேதான், இன்றும் கிராமப்புரங்களில், பசுஞ்சாணத்தை கொண்டு வாசல் தெளித்து கோலம் போடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். விடியற்காலையில் எழுந்து வீட்டு வாசலை சுத்தம் செய்து, சாணம் தெளித்து கோலம் போடுவது அழகுக்காக மட்டுமல்ல, அதிகாலையில் எழும்போதே தர்ம சிந்தனையுடன் எழும் இல்லத்தரசி, சாணம் தெளித்து தீய கிருமிகளை அழிக்கும் செயலை செய்கிறாள்.

பசுஞ்சாணம் என்பது ஒரு கிருமிநாசினியாக செயல்படுவதால், அந்த வீட்டில் உள்ளவர்கள் ஆரோக்கியமாக வாழ வழி செய்கிறது. கோலங்கள் வெறும் அலங்கார நோக்கத்திற்காக மட்டு மல்லாமல், இல்லத்தில் உள்ள தீய மற்றும் எதிர்மறை தாக்கங்களை அழிப்பதற்கும் வரையப்படுகிறது.

கோலங்கள் பல்வேறு சமூக, ஆன்மிக நுண்கருத்துக்களை உள்ளடக்கியுள்ளது. இல்லத்தில் உள்ளவர்களுக்கு மட்டும் அமுது படைக்காமல், தினமும் நம்மைச் சுற்றியுள்ள உயிரினங்களுக்கும் உணவிடுவதற்காகவே இல்லத்தரசி, அரிசிமாவினால் கோலம் இடுகிறாள். “பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்” நம் பண்பாடன்றோ! நமது பெரியோர்கள் கோலமிடுவதற்கு சில சாஸ்திரங்களை வகுத்துள்ளனர். அதை அடுத்த தலைமுறையினரிடம் சேர்க்கும் மிகப்பெரிய பொறுப்பு இக்கால பெண்களுக்கு உள்ளது.

கோலத்திற்கு காவியும் தீட்டினால் அங்கு பகவானும், லட்சுமியும் எழுந்தருள்கிறார்கள் என்கிறது தர்ம சாஸ்திரம். சுபகாரியங்களுக்கு கோலமிடும் போது ஒற்றைக் கோடு ஆகாது. அசுப காரியங்களுங்கு இரட்டை கோடு கோலம் போடக்கூடாது. இதை இலைக்கோலம் போடும் போடு கவனத்தில் கொள்ள வேண்டும்.

அரிசிமாவினால் மட்டுமே கோலமிட வேண்டும் என்பது நியதி. ஆனால், தற்போது சுண்ணாம்பு பவுடர் முதல் பலவித வண்ணங்களிலும் கோலமிடுவது நாகரீகமாகி விட்டது. முடிந்தவரை உப்பு, மணல் ஆகியவற்றை கொண்டு கோலமிடுவதை தவிர்க்கவும். சென்ற இதழில் கலாச்சாரத்தின் நுழைவு வாயிலே கோலமாகும் என்ற தலைப்பில் வந்த கட்டுரையில் ஐஸ்வர்ய கோலம், ஹிருதய கமலக் கோலம், லட்சுமி குபேர கோலம் பற்றி சொல்லியிருந்தோம். ஆன்மிக வாசகர்களுக்காக வாரத்தில் உள்ள ஏழு நாட்களான ஞாயிறு முதல் சனி வரை ஒவ்வொரு நாளும் கோலத்தை நம் இல்லத்தின் பூஜை அறையில் போடலாம்.

தொகுப்பு: அனுஷா

Tags :
× RELATED சுந்தர வேடம்