×

கோயிலில் தெய்வங்களை வணங்கும் முறை: சகல தெய்வங்களின் அருள் நிச்சயம்

வெறுமனே இறைவனை வழிபட்டு வருவது வழிபாடு அல்ல. நம்மை பண்படுத்திக் கொள்ளவும், நம் மனதை ஒருமுகப்படுத்தி இறைவனை வணங்க முயல்வதால் நம் மனக் கலக்கம் தீருவதோடு, தைரியமும், எந்த ஒரு செயலை செய்யக்கூடிய நம்பிக்கையும் பிறக்கிறது. இந்து மதத்தில் ஒவ்வொரு கடவுளையும் ஒவ்வொரு முறையில் வணங்கி வழிபாடு செய்ய வேண்டும். அந்த வகையில்,

* பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளை வணங்கும் போது, சிரசின் மேல் 12 அங்குலம் கைகளை உயர்த்தி வணங்க வேண்டும். மற்ற தெய்வங்களை சிரசின் மேல் கைகளைக் குவித்து வணங்கினாலே போதுமானது.

* குருவை வணங்கும் போது, நெற்றிக்கு நேராக கைகூப்பி வணங்க வேண்டும்.

* தந்தையை வணங்கும் போது, வாய்க்கு நேராக கைகூப்பி வணங்க வேண்டும்.

* தாயை வணங்கும் போது, வயிற்றிற்கு நேராக கை வைத்து வணங்க வேண்டும்.

* மாதா, பிதா, குரு தெய்வங்களை வணங்கும் போது, ஆண்கள் அஷ்டாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும். அதாவது பூமியில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்குதல் முறையாகும். அதே போல் பெண்கள் மேற்கண்டவர்களை வணங்கும்போது பஞ்சாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும்.

* விநாயகரை ஒரே ஒரு முறை தான் வலம் வந்து வணங்க வேண்டும்.

* சிவன் - பார்வதி (அம்மனை) மூன்று முறை வலம் வர வேண்டும்.

* தோஷ நிவர்த்திக்காகப் பெருமாள், தாயாரை வணங்குபவர்கள் நான்கு முறை வலம் வந்து வணங்கவும்.

* சூரியன் தனியாக இருப்பின் 2 முறை வலம் வர வேண்டும்.

* சித்தர்கள், மகான்களின் ஜீவ சமாதியை வணங்கும் போது 4 முறை வலம் வர வேண்டும்.

* ஏனைய தெய்வங்களை 3 முறை வலம்வந்து வணங்க வேண்டும்.

* கோயிலில் ஒவ்வொரு இறைவனுக்கு எப்படி சுற்றி வணங்கினால் நல்லதோ அது போன்று வணங்கிவிட்டு, கடைசியாக கோயிலுக்குள் இருக்கும் ஆலய பலிபீடம், கொடிக்கம்பம் முன்பு தான் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்க வேண்டும்.

Tags :
× RELATED சுந்தர வேடம்