துர்க்கையின் வழிபாட்டு பயன்கள்

துர்க்கை என்னும் சொல்லுக்கு வடமொழியில் ``வெல்லமுடியாதவள்” என்று பொருள். தமிழில் வெற்றிக்கு உரியவள் என்று அர்த்தம். அன்னை துர்க்கைக்கு பல்வேறுபட்ட புராணக் கதைகள் உள்ள போதும் மகிஷாசூரனாகிய மேதியவுணனை அழிக்கவே அவள் தோன்றியதாக புராணங்களில் சொல்லப்படுகின்றது. அதனால் அவள் மகிஷாசூரமர்த்தினி என்று அழைக்கப்படுகிறாள். துர்க்கை தேவியினை நாம் பல வடிவங்களில் வழிபட்டு வருகிறோம். அவளின் ஒவ்வொரு வடிவத்தினை வழிபடுவதால் ஏற்படும் நன்மையை தெரிந்து கொள்ளலாம்.

*ருத்ர துர்க்கை - பகைவர்களை அழிப்பவள்.

*மகாதுர்க்கை - காலத்தைக் கடந்தவள். செல்வ செழிப்பை தருபவள்.

*விஷ்ணுதுர்க்கை - வைஷ்ணவி, நாராயணி என்ற நாமத்தை உடையவள். சாந்த சொரூபிணி, அமைதி தருபவள்.

*ஸ்தூல துர்க்கை - வாழ்வெனும் உடலில் சோதனைகளை, வலிகளைத் தாங்கி மீண்டு வர உதவுபவள்.

*அக்னி துர்க்கை - பசித்தீ, காமத்தீ போன்ற ஆசைத் தீயிலிருந்து விடுபட உதவுபவள்.

*பிரம்ம துர்க்கை - சகல வித்தைகளுக்கும் அதிபதி. குழந்தைகளை நவராத்திரியின் 6-வது நாளில் இந்த துர்க்கையை வணங்கச் செய்தால் கல்வி ஞானம் பெறலாம்.

*ஜலதுர்க்கை - தாராதேவி எனப்படும் இவள் துணை காத்து கரை சேர்ப்பாள்.

*சூலினி துர்க்கை - சூலாயுதம் ஏந்தி, பஞ்சபூதங்களை கட்டுக்குள் வைத்திருப்பவள்.

*வனதுர்க்கை - சுற்றுலா பணி நிமித்தம் காடுகளை கடக்கையில் பாதுகாப்பவள் இவளே.

கொல்கத்தாவிலிருந்து 228 கிலோ மீட்டரில் உள்ளது நலஹட்டி. இங்கே காளியின் ரூபமாக சின்ன மஸ்தா தேவியாக காட்சியளிக்கிறாள். இவளுக்கு உருவமோ, விக்கிரகமோ கிடையாது. இக்கோயிலுக்கு கோபுரமும் இல்லை.

தொகுப்பு - மகாலெஷ்மி சுப்ரமணியன், காரைக்கால்.

Related Stories: