ரன்பீர் கபூரை பிரிந்ததால் சந்தோஷமாக இருக்கிறேன்; கேத்ரினா கைப் பேட்டி

தீபிகா படுகோனேவை காதலித்தார் ரன்பீர் கபூர். கருத்து மோதல் ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர். பின்னர் கேத்ரினா கைபுடன் ரன்பீர் நெருங்கி பழகினார். திடீரென அவரையும் பிரிந்தார். இப்போது நடிகை அலியா பட்டை காதலித்து வருகிறார். ரன்பீரை பிரிந்தது பற்றி கேத்ரினா  எதுவும் கூறாமல் இருந்து வந்தார். இப்போதுதான் அது பற்றி அவர் பேசியுள்ளார். கேத்ரினா கூறியது:

அவரை பிரிந்த பிறகு இத்தனை நாட்களாக நான் என்னையே புரிந்து கொள்ளாமல் வாழ்ந்தது தெரிய வந்துள்ளது. அந்த காதல் முறிவுக்கு பிறகு என் வாழ்வில் தெளிவு ஏற்பட்டுள்ளது. இத்தனை நாட்களாக என்னை புரிந்து கொள்ளாமல் வாழ்ந்து வந்திருக்கிறேன். தற்போது என் வாழ்வில் நான் மட்டும் தான். அதனால் என் கவனம் எல்லாம் என் மீது மட்டும் தான்.

நான் யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை. என்னிடம் பாசம் காட்டினால் நானும் பாசமாக இருப்பேன். இல்லை என்றால் கண்டுகொள்ள மாட்டேன். என் கெரியர் நன்றாக சென்று கொண்டிருக்கிறது. ஜீரோ படத்தில் நடித்துள்ளேன். திடீர் என்று ஒரு நாள் சல்மான் கானின் பாரத் படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. நடிப்பில் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன். இவ்வாறு கேத்ரினா கூறினார்.

× RELATED தேர்தல் ஆணையம் நடுநிலையாக செயல்பட்டு...