கர்ப்பமாக இருக்கிறேனா? அனுஷ்கா சர்மா கோபம்

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோஹ்லியை காதலித்து கடந்த ஆண்டு மணந்தார் அனுஷ்கா சர்மா. இவர்களின் திருமணம் இத்தாலியில் நடந்தது. இதையடுத்து பாலிவுட் பிரபலங்கள் பலர் அனுஷ்காவை போல் இத்தாலியில் திருமணம் செய்ய விரும்புகின்றனர். தீபிகா படுகோனே, ரன்வீர் சிங் திருமணமும் சமீபத்தில் இத்தாலியில் நடந்து முடிந்தது. தொடர்ந்து அலியா பட், ரன்பீர் கபூர் திருமணமும் இத்தாலியிலேயே நடத்த யோசிக்கிறார்களாம்.

சமீபத்தில் தீபிகா படுகோனே, ரன்வீர் சிங்கின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி மும்பையில் நடந்தது. அப்போது ரன்வீர் சிங்கின் முன்னாள் காதலியான அனுஷ்கா சர்மா இதில் பங்கேற்றார். அப்போது அவரது கணவர் விராட் கோஹ்லி இல்லை. இந்த விழாவில் பங்கேற்றபோது அனுஷ்காவை பார்த்த பலரும் நீங்க கர்ப்பமா இருக்கிறதா செய்தி வந்ததே என கேள்வி கேட்டு நலம் விசாரித்துள்ளனர்.

இதில் அனுஷ்கா கோபமாகிப் போனார். இந்நிலையில் மீடியாவினர் ஒரு நிகழ்ச்சிக்கு வந்த அனுஷ்காவிடம் இது பற்றி கேட்டபோது, ‘நீங்க என்ன வேணும்னாலும் எழுதலாம். அது படித்துவிட்டு நான் சிரித்துவிட்டு போய்விடுவேன். ஆனால் சில நாட்களிலேயே நீங்கள் பொய்யை பரப்புவது மக்களுக்கு தெரிந்துவிடும். அப்போது நீங்கள் முட்டாள் ஆகிவிடுவீர்கள்’ என ஆவேசமாக சொல்லிவிட்டு புறப்பட்டார்.

× RELATED மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் அனுஷ்கா ஷர்மாவின் மெழுகுச்சிலை