மலையாளத்தில் அறிமுகமாகும் 96 கவுரி

96 படத்தில் சிறு வயது திரிஷாவாக நடித்தவர் புதுமுகம் கவுரி. இவர் அடுத்ததாக மலையாளத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அனுகிரஹீதன் ஆண்டனி என படத்துக்கு தலைப்பிட்டுள்ளனர். சன்னி வேய்ன் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக கவுரி நடிக்க உள்ளார். காயங்குளம் கொச்சுண்ணி மலையாள படத்தில் வில்லனாக சன்னி நடித்திருந்தார்.

இவர் ஜிப்ஸி தமிழ் படத்தில் ஜீவாவுடன் நடித்துள்ளார். கவுரி கூறும்போது, ‘சஸ்பென்ஸ் கலந்த எமோஷனல் படமாக இது உருவாகிறது. 96 பட கேரக்டரிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இந்த படம் இருக்கும். சன்னி வேய்னின் நடிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும். அவரோடு நடிப்பது சந்தோஷம்’ என்றார்.

× RELATED மலையாளத்தில் அறிமுகமாகும் ரெஜினா கெசன்ட்ரா