பகைவனுக்கு அருள்வாய் படத்தில் பாடலாசிரியராகும் 9 வயது சிறுமி

ஷேக்ஸ்பியரின் மெக்பெத் நாடகம் தமிழில் படமாகிறது. இப்படத்திற்கு பகைவனுக்கு அருள்வாய் என்று பெயர்  சூட்டப்பட்டுள்ளது. திரைக்கதை எழுதி படத்தை அனீஸ் இயக்குகிறார். இவர் திருமணம் எனும் நிக்காஹ் படத்தை இயக்கியவர். ஜிப்ரான் இசை அமைக்கிறார். 96 படத்துக்கு ஒளிப்பதிவு செய்த ஷண்முக சுந்தரம் ஒளிப்பதிவு செய்ய, மு.காசி விஸ்வநாதன் படத்தொகுப்பை கவனிக்கிறார். இரண்டு முக்கிய கதாபாத்திரத்தில் ஒன்றில் சதீஸ் நீநாசம் அறிமுகமாகிறார்.

இவர் லூசியா உள்பட பல கன்னட படங்களில் நடித்துள்ளார். இன்னொரு  கதாபாத்திரத்தில் சரண் சஞ்சய் நடிக்கிறார். இவர், சுசீந்திரன் இயக்கி வரும் ஏஞ்சலீனா படத்தில் நடித்து வருகிறவர். கதாநாயகி, மற்ற நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்று வரும்  இப்படத்தின் ஷூட்டிங் விரைவில் ஆரம்பமாகிறது. சங்க இலக்கிய பாடல்கள், கவிதைகளால் யூ டியுபில் பிரபலமான 9 வயது சிறுமி அனன்யா ராஜேந்திரகுமார் இந்த படத்தில் பாடல் ஆசிரியையாக அறிமுகம் ஆகிறார்.

× RELATED நகை திருடுபோன விவகாரம் பாடலாசிரியரை...