தமிழில் வரும் மார்டல் இன்ஜின்ஸ்

மார்டல் இன்ஜின்ஸ் பெயரில், பிலிப் ரீவ் எழுதிய நாவலை மையமாக வைத்து கிறிஸ்டியன் ரிவர்ஸ் இயக்கியுள்ள சயின்ஸ் ஃபிக்‌ஷன் படம்தான் மார்டல் இன்ஜின்ஸ். வருங்கால அறிவியல் உலகத்தை கண்முன் நிறுத்தும்படியான படமாக இது உருவாகியுள்ளதாம். லண்டன் மாநகரமே சக்கரத்தில் பயணிக்கிறது. விஞ்ஞான ரீதியிலான சில நிகழ்வுகளின் விளைவாக, மனித குலமே உருமாறுகிறது.

ஒருவரையொருவர் அடித்துக் கொண்டும், கொலை செய்தும் வாழ்கிற ஒரு சூழல். இந்த நேரத்தில் அங்கு சக்தி பெற்ற பெண்ணாக ஹிரா ஹில்மர் வருகிறார். அதன் பிறகு நடப்பதை பரபரப்பாக படம் விவரிக்குமாம். நாளை வெளியாகும் இந்த படம் தமிழிலும் ரிலீசாகிறது.

× RELATED வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் நுண்பார்வையாளர்களுக்கு பயிற்சி