2018-ல் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்த விஜய்யின் சர்கார்

2018-ம் ஆண்டு இந்திய அளவில் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் தளபதி விஜய் முதலிடம் பிடித்துள்ளார். சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான படம் சர்கார். விஜய்யுடன் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராதாரவி, பழ.கருப்பையா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். அரசியல் மற்றும் சினிமாத்துறையில் சமூக வலைத்தளங்களின் பங்கு வகிக்கிறது.

அரசியல் ரீதியான கருத்துக்களை நேரடியாக மக்களிடத்தில் சேர்க்கவும், படத்தின் புரொமோஷன்களுக்காக ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவது அதிகரித்துவிட்டது. இந்நிலையில், இந்த ஆண்டு ட்விட்டர் ட்ரெண்ட்ஸ் டாப் 10 பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் தென்னிந்திய திரைப்படங்கள் மற்றும் நடிகர்கள் தொடர்பான ட்வீட்களே ஆதிக்கம் செலுத்தியுள்ளன. இதில் இந்திய அளவில் முதல் 10 இடங்களில் 7 இடங்களை தென்னிந்திய சினிமா கைப்பற்றியுள்ளது.

தளபதி விஜய் நடித்த சர்கார் #Sarkar படத்தின் ஹேஷ்டேக் முதலிடத்தையும், அதைத் தொடர்ந்து ‘விஸ்வாசம்’ #Viswasam ஹேஷ்டேக் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது. மகேஷ் பாபுவின் பரத் அனே நேனு #BharatAneNenu, ஜூனியர் என்.டி.ஆரின் அரவிந்த சமேதா #AravindhaSametha, ராம் சரணின் ரங்காஸ்தலம் #Rangasthalam, சூப்பர் ஸ்டாரின் காலா #Kaala என அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளது.

மேலும், ட்விட்டரில் அதிக செல்வாக்கு பெற்ற மொமெண்ட்ஸாக விஜய்யின் சர்கார் முதலிடத்திலும், மீ டூ இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது. இதில் #Sarkar #MeToo #KarnatakaElection #KeralaFloods #Aadhaar #JusticeForAsifa #DeepVeer #IPL2018 #WhistlePodu #AsianGames2018 ஆகிய ஹேஷ்டேக்குகளும் இடம்பிடித்தன.

× RELATED விஜய் சேதுபதியுடன் மீண்டும் காயத்ரி