×

ஏன் புரட்டாசியில் நவராத்திரி?

நன்றி குங்குமம் ஆன்மிகம்

இதில் ஜோதிட ரீதியான முக்கியமான குறிப்பும் இருக்கிறது. சூரியன் புரட்டாசி மாதத்தில் கன்னி ராசியில் பிரவேசிக்கிறார். சூரியன் வித்தைக்கு நாயகன். சூரியனிடமிருந்துதான் சகல கலைகளையும் அனுமன்கற்றார். சூரியன் சஞ்சரிக்கும் கன்னி ராசிக்கு உரிய கோள் புதன். புதன் கலைகளுக்கு அதிபதி. வித்தைக்கு அதிபதி. புத்திக்கு அதிபதி. எனவே கலைகளுக்கு அதிபதியான புதனுடைய ராசியில் சூரியன் பிரவேசிக்கும் கன்னி மாதத்தை நவராத்திரி உற்சவம் கொண்டாடத் தேர்ந்தெடுத்தார்கள்.

இசை, நடனம், விளையாட்டு போன்ற கலை பயில்பவர்களும், ‘அட்சர அப்பியாசம்’ என்னும் முதல்படிப்பு சடங்கு செய்பவர்களும் புரட்டாசியில் வரும் விஜயதசமி நாளிலேயே தொடங்குகிறார்கள். புரட்டாசியில் வரும் இந்த நவராத்திரியை சரஸ்வதியின் பெயரை இணைத்து ‘சாரதா நவராத்திரி’ என்று அக்காலத்தில் அழைத்தனர். (சரஸ்வதிக்கு, சாரதா என்ற பெயரும் உண்டு).

வளர்பிறை தேர்ந்தெடுக்கப்பட்டதற்குக் காரணம், சந்திரன் ஒவ்வொரு கலையாக வளர்வதுபோல, எல்லா கலைகளும் பூரணமாக வளர்ந்து பெருவெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே, வளர்பிறையைத் தேர்ந்தெடுத்தார்கள். படிநிலை வளர்ச்சியைக் குறிப்பதற்காகவே ஒவ்வொரு படியாக ஏறுவதுபோல் வைத்தார்கள். எந்த நிலையில் இருந்தாலும், மனிதன் அறிவாலும் ஞானத்தாலும் உயர்ந்து, தன்னுடைய இலக்கை அடைய வேண்டும் என்பதுதான் நவராத்திரி உற்சவத்தின் நோக்கம்.

தொகுப்பு - எஸ்.கிருஷ்ணஜா

Tags : Navratri ,Puratasi ,
× RELATED மங்கலங்கள் அருளும் மகா சிவராத்திரியின் தத்துவமும் தரிசனமும்