- சென்னை
- பிபின் மிட்டாடில்
- ஷட்டர் பிரேம்கள்
- ஜயகிர்ணன்
- ஷர்மிளா
- நந்தன் உன்னி
- தன்வி வினோத்
- மிதுன் வேம்பலகல்
- ப்ரீத்தி ஜினோ
- நஸ்ரின் நசீர்…
சென்னை: ஷட்டர் பிரேம்ஸ் சார்பில் பிபின் மிட்டாதில் தயாரித்துள்ள ஹிஸ்டாரிக்கல் கலந்த ஹாரர் படம், ‘ஹோலோகாஸ்ட்’. வரும் 13ம் தேதி திரைக்கு வரும் இதில் ஜெயகிருஷ்ணன், ஷர்மிளா, நந்தன் உன்னி, தன்வி வினோத், மிதுன் வெம்பலக்கல், பிரீத்தி ஜினோ, நஸ்ரின் நசீர் நடித்துள்ளனர். ‘காவியன்’ ஷ்யாம் மோகன் எம்.எம் இசை அமைக்க, விபின் ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். எடிட்டிங் செய்து கிரியேட்டிவ் இயக்குனராக டினோ ஜாய் புத்தெட்டு பணியாற்றியுள்ளார்.
ரெஜித் வி.சந்து நடனப் பயிற்சி அளிக்க, மனோஜ் குமார் வசனம் எழுதியுள்ளார். கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ள விஷ்ணு சந்திரன் கூறுகையில், ‘ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து படம் உருவாகியுள்ளது. 6 நாட்களில் கதை நடந்து முடிகிறது. செல்ஃப் கோஸ்டின் ரிவெஞ்ச், அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை ரசிகர்களுக்கு ஏற்படுத்தும். கேரளா வாகமனில் படப்பிடிப்பு நடந்துள்ளது’ என்றார்.