- சென்னை
- பிரின்ஸ் பிக்சர்ஸ்
- பி.எஸ்.மித்திரன்.
- கார்த்தி
- சஜே சூர்யா
- மாலவிகா மோகனன்
- ஆஷிகா ரங்கநாத்
- சூரஜ் வென்ச்சுராமுடு
- ரஜிஷா விஜயன்
- யோகி பாபு
- ஜார்ஜ்...
சென்னை: பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘சர்தார் 2’. பி.எஸ்.மித்ரன் இயக்கம். இதில் கார்த்தி, எஸ்.ஜே.சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், சூரஜ் வெஞ்சுரமுடு, ரஜிஷா விஜயன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதன் ஒளிப்பதிவாளராக ஜார்ஜ் வில்லியம்ஸ், இசையமைப்பாளராக சாம் சி.எஸ் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.
‘சர்தார்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கார்த்தி நடிப்பில் தொடங்கப்பட்ட படம் ‘சர்தார் 2’. இதன் படப்பிடிப்பு சென்னை, ஐதராபாத், மைசூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்று வந்தது. இதன் இறுதிகட்டப் படப்பிடிப்பு தாய்லாந்தில் தொடங்கப்பட்டது. தற்போது ‘சர்தார் 2’ படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்றதாக படக்குழு அறிவித்திருக்கிறது.