×

நினைத்ததை முடிப்பவள் நீலி

``இரண்டு பேரும் இன்னைக்கு இந்த கல்மண்டபத்தில் தங்குங்க, நாளைக்கு விடிஞ்ச பிறகு நம்ம பஞ்சாயத்து வச்சுக்கலாம்’’ என்றனர் ஊர் பெரியவர்கள். அப்போது நீலி, ‘‘ஐயா, எனது கணவர் என்னையும், என் குழந்தையையும் இரவோடு இரவாகக் கொன்றுவிட்டு, வேறு பெண்ணை திருமணம் செய்யும் எண்ணத்தில் இடுப்பில் கத்தி ஒன்று வைத்துள்ளார்.’’ என்றாள். சபையோர் கத்தியை கேட்க, முதலில் மறுத்த ஆனந்தன், பின்னர் கத்தியை அவர்களிடம் கொடுத்தார்.

சரி, இரவில் எனக்கு ஏதாவது ஆகிவிட்டது என்றால் நான் என்ன செய்வேன் என்று ஆனந்தன் கேட்க, சபையோர், ஒன்றும் ஆகாது அஞ்சாதே, இந்த சாட்சி பூதேஸ்வரர் திருக்கோயில் முன்பாக சொல்கிறோம். உனக்கு ஏதாவது நேர்ந்தால் நாங்கள் எழுபது பேரும் நெருப்பு மூட்டி மாண்டு போவோம். இது சத்தியம் என்றனர்.

அதனை நம்பி, ஆனந்தன், நீலியுடன் கல்மண்டபத்திற்கு சென்றார். 70 குடும்பங்களில், தங்களுள் ஒருவரை தேர்ந்தெடுத்து, சபையோர் கூறினார்கள், ``அவர்கள் சந்தோஷமாக உரையாடினால் வந்துவிடு, சண்டையிட்டால் எங்களுக்குக் குரல்கொடு’’ என்று கூறி கல்மண்டபத்திற்கு முன்பிருந்து பார்த்துக்கொள். என்று காவலுக்கு வைத்தனர்.

கல்மண்டபத்திற்கு சென்றதும், மாய தோற்றத்தில் எண்ணற்ற பலகாரங்களை வரவழைத்தாள் நீலி ‘‘அத்தான் உங்களுக்குதான் அதிரசம் மிகவும் பிடிக்குமே, சாப்பிடுங்கள் என்று உரைத்தாள். வேண்டாம், வேண்டாம் என்றான் ஆனந்தன், உடனே நீலி, குழந்தை நீ, உன் கையால கொடும்மா, அப்பதான் உங்கப்பா சாப்பிடுவாரு’’ என்று கூறினாள்.

இதைக் கேட்ட காவலுக்கு இருந்த கரையாளர், இவர்கள் உண்மையான தம்பதியினர்தான். எனக்கருதி அவ்விடம் விட்டுச் சென்றுவிடுகிறார். இதையறிந்த நீலி ஆனந்தனிடம், போன ஜென்மத்தில் உன்னை நம்பி வந்த என்னை கொன்றுவிட்டாயே படுபாதகா என கூறிக்கொண்டு ஆனந்தனை மல்லாக்க படுக்க வைத்து, தன் கை நகங்களால் அவனது மார்பை கிழித்தாள்.

குடலை உருவி மாலையாக போட்டுக்கொண்டு, ஆதாளி போட்டபடி அங்கிருந்து வெளியேறினாள். கையில் குழந்தையும் ரூபம் மாறி ஆக்ரோஷமானது. அதை காலில் போட்டு மிதித்தாள். 70 குடும்பங்கள் தீயில் பாய்ந்து உயிரை மாய்த்தல் காலையில், 70 குடும்பத்தினர்கள் வந்து பார்த்தபோது மண்டபத்தின் உள்ளே ஆனந்தன் பலியாகி கிடந்தான்.

அப்போது, ஆனந்தனின் தாய் என்று கூறி முதுமை நிறைந்த பெண்ணாக நீலி வந்தாள். கூடியிருந்த அந்த 70 குடும்பங்களிடம், ஐயா, எனது மகன் ஆனந்தன் வியாபாரம் செய்ய, உங்க ஊருக்கு வந்தானய்யா, இப்போ எங்கே என்று கேட்க, கூடியிருந்தவர்கள் அம்மா... என்றபடி நா.. தள தளத்தார்கள். உடனே சாட்சிபூதேஸ்வரர் ஆலயம் முன்பு நெருப்பு மூட்டி, அதில் 70 குடும்பங்களும் விழுந்து மாண்டு போனார்கள்.

அதன்பின், அங்கிருந்து முதுமைப்பெண் உருமாறி தயிர் விற்கும் பெண்ணாக வந்த நீலி, தெருவில் நின்று, ``ஏ...பொண்ணுங்களா, நெருப்பில் விழுந்து மாலையிட்டவன் மாண்டபின் மனையாள் உயிர் வாழ்தல் எவ்விதம் கற்பு நெறி வாழ்க்கையாகும்’’ என்றுரைத்தாள். அதனைக் கேட்ட அப்பெண்களும் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டனர். அதைக் கண்டு சந்தோஷம் பொங்க பழையனூர் முழுவதும் குரலை விட்டு, ஆதாளி போட்டபடி சென்றாள் நீலி.

தொகுப்பு: சு.இளம் கலைமாறன்

Tags : Neeli ,
× RELATED பழையனூர் நீலி பேயா? பெண்ணா?