×

சௌபாக்கியத்தை தரும் லக்ஷ்மி அஷ்டகம்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

கேட்கும் வரங்களைத் தரும் லட்சுமி தேவியை பூஜித்தல் இதன் சிறப்பு. திருமணமான பெண்கள், தங்கள் திருமணத்தை அடுத்துவரும் வரலட்சுமி பூஜையிலிருந்து இதை ஒவ்வொரு வருடமும் செய்ய  வேண்டும். வரலட்சுமி விரதத்தின்போது வீட்டுக்கு விலக்காக இருந்தால் அடுத்து வரும் வெள்ளிக்கிழமை இந்த பூஜையைச் செய்யலாம். இதைச் செய்யும்போது, சிறு பெண்களும் உடனிருந்து சரடைக் கட்டிக்கொள்ளலாம். மறுநாள் அம்மனுக்கு ஆரத்தி எடுத்த பின்னர் கலசத்தை அரிசி வைத்திருக்கும் பானையில் வைக்க வேண்டும்.

எல்லோராலும் மிக விரிவாகச் செய்ய இயலாவிட்டாலும், ஈடுபாட்டோடு தெரிந்த பாடல்களைப் பாடி, மகாலட்சுமி அஷ்டோத்திரம் சொல்லி, பூக்களால் அர்ச்சனை செய்து, நிவேதனம் செய்து, நோன்பு சரடை கையில் கட்டி நிவேதனத்தை எல்லோருக்கும் கொடுத்து, வயதான சுமங்கலிப் பெண்களை வணங்கி தானங்கள் செய்து இந்த விரத பூஜையை நிறைவு செய்யலாம். மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துஸ்வாமி தீட்சிதர், தன் ‘வரலக்ஷ்மி நமஸ்துப்யம்’ க்ருதியில் இந்த விரதத்தைப் பற்றிப் பாடியிருக்கிறார். கீழ்க்காணும் ஸௌபாக்ய லக்ஷ்மி அஷ்டகத்தை வரலக்ஷ்மி தினத்தன்று பாராயணம் செய்து சகல நலன்களையும் வளங்களையும் பெற்றிடலாம்.

ஸௌபாக்ய லக்ஷ்மி அஷ்டகம்.
த்யானம்
வந்தே ஸத்குருவரலக்ஷ்மீம்
ஸம்பூர்ணஸௌபாக்யலக்ஷ்மீம்
க்ஷீரஸாஹரோத்பவலக்ஷ்மீ ஜயஜயகோலக்ஷ்மீம்
ஆனந்த அம்ருதலக்ஷ்மீம் அம்ருதகடாக்ஷ லக்ஷ்மீம்
ஆபதோத்தாரலக்ஷ்மீம் சாந்தி ஸௌபாக்ய லக்ஷ்மீம்
ஓம்  ஆதிஸந்நான கஜ தனதான்ய
விஜயவீர மஹாலக்ஷ்மியை நமோ நம:

ஸர்வாலங்காரலக்ஷ்மீம் ஸகல ஸௌபாக்ய லக்ஷ்மீம்
சாரதாரூபலக்ஷ்மீம் ஸகலஸௌ பாக்யலக்ஷ்மீம்
ஜிஹ்வாநிவாஸலக்ஷ்மீம் ஸார ேக்ஷத்ரப்ர ஸாதலக்ஷ்மீம்
மந்த்ரஸ்வரூபலக்ஷ்மீம் மானஸோல்லாஸலக்ஷ்மீம்
மானஸோல்லால லக்ஷ்மீம் சரணம் ப்ரபத்யே
விநயவிமலலக்ஷ்மீம் வேதாந்த சாரலக்ஷ்மீம்

கருணாகடாக்ஷலக்ஷ்மீம் காருண்ய பாக்யலக்ஷ்மீம்
புத்ர சந்தானலக்ஷ்மீம் புவனதன தான்யலக்ஷ்மீம்
ஸர்வஸௌ பாக்யலக்ஷ்மீம் சாந்திஸம்பன்னலக்ஷ்மீம்
சாந்திஸம்பன்ன லக்ஷ்மீம் சரணம்ப்ரபத்யே
வித்யவிசாலலக்ஷ்மீம் வேதாந்தமோக்ஷ லக்ஷ்மீம்
அக்ஷ்ரபாக்யலக்ஷ்மீம் ஆத்மாநூபூதி லக்ஷ்மீம்
தாபத்ரயநாசலக்ஷ்மீம் தன்வந்த்ரிரூப
லக்ஷ்மீம்

லோஹஸ்வரூபலக்ஷ்மீம் சுத்தசௌபாக்ய லக்ஷ்மீம்
சுத்தஸௌபாக்யலக்ஷ்மீம் சரணம்
ப்ரபத்யே
ஸ்தாவரஜங்கமலக்ஷ்மீம் கோதான்யா
விருத்திலக்ஷ்மீம்

ஸோமஸோதரபாக்யலக்ஷ்மீம் சிந்தாமணி ரத்னலக்ஷ்மீம்
க்ஷீரஸௌபாக்யலக்ஷ்மீம் ஸேவிதமோஹ லக்ஷ்மீம்
ஜயஜவைராக்யலக்ஷ்மீம் சித்தப்ரஹாச லக்ஷ்மீம்
சித்தபிரஹாசலக்ஷ்மீம் சரணம் ப்ரபத்யே
கல்பககாமதேனுலக்ஷ்மீம் கனகஸௌ பாக்யலக்ஷ்மீம்

தேவேந்தராரோஹணலக்ஷ்மீம் ஐராவத பூஜ்யலக்ஷ்மீம்
கிருஷ்ணமூர்த்திலக்ஷ்மீம் ஸேவ்யஸம் பன்னலக்ஷ்மீம்
வீர்யவிஜயலக்ஷ்மீம்
விஷ்ணுமாயேதி லக்ஷ்மீம்
விஷ்ணுமாயேதி
லக்ஷ்மீம் சரணம் ப்ரபத்யே

ஜ்வரபயஸோஹ ஹந்த்ரீம் ஸோஹவிநாஸ மந்த்ரீம்
துஷ்டமிருகவைர்தந்த்ரீம் துர்ஸ்வப்ன நாஸ யந்த்ரீம்
துர்காஸ்வரூபலக்ஷ்மீம் துரிதஹரமோக்ஷ லக்ஷ்மீம்
ஸாயுஜ்யஸாம்ராஜ்யலக்ஷ்மீம் ஸத்யஸ் வரூபலலக்ஷ்மீம்
ஸத்யஸ்வரூபலக்ஷ்மீம் சரணம் ப்ரபத்யே

ஜயஜயகோஷலக்ஷ்மீம் சோமஸௌபாக்யலக்ஷ்மீம்
ஸர்வஸக்தி ஸ்வரூபலக்ஷ்மீம் ஸர்வ மூர்த்திப்ரபாவ லக்ஷ்மீம்
அனுக்ரஹ ஆச்சார்யலக்ஷ்மீம் பாலகுஹ யோஹ லக்ஷ்மீம்
ஸர்வஸமய லக்ஷ்மீம்
ஜயமங்களஸ்தோத்ர லக்ஷ்மீம்

ஜயமங்களஸ்தோத்ரலக்ஷ்மீம் சரணம் ப்ரபத்யே
ஞானஸ்வரூபலக்ஷ்மீம் நாதாந்தஞான
லக்ஷ்மீம்
ஸ்வரமயகீதலக்ஷ்மீம் ஞானப்ரமோத லக்ஷ்மீம்
ஹ்ருத்யகமலவாஸலக்ஷ்மீம் சதுர்வேதஸார லக்ஷ்மீம்
ஸஹஸ்ரகர ஸௌபாக்யலக்ஷ்மீம்

அஷ்டஸௌபாக்ய ஸ்லோகலக்ஷ்மீம்
சரணம் ப்ரபத்யே.
அஷ்டகம்  என்றால் எட்டுப் பொருள்

களைக் கொண்டது என்பது பொருள். ஈரடிகளாக வரும் இந்த ஸ்லோகம்
இந்திரனால் மஹாலக்ஷ்மியை துதித்து “பத்மபுராணத்தில்” பாடப்பட்டது.
இந்த மஹாலக்ஷ்மி அஷ்டகத்தை ஒரு முறை, இரு முறை,
மூன்று முறைகளால் சொல்வதால் ஏற்படும் பலன்களைக் குறிப்பது.

நமஸ்தேஸ்து மஹாமாயே பீடே ஸுரபூஜித
ஷங்க சக்ர கதா ஹஸ்தே மஹாலக்ஷ்மி நமஸ்துதே
படைப்பின் மூல காரணங்களாக விளங்குபவளும், பீடத்தில் வைத்து ஸூரர்களால் வணங்கப்படுபவளும், அழகிய கரத்தில் சங்கையும், சக்கரம், கதை வைத்திருப்பவளுமான மஹாலக்ஷ்மியை வணங்குகிறேன்.

நமஸ்தே கருடாரூடே கோலாஸுர பயங்கரி
ஸர்வபாப ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமஸ்துதே
கருட வாகனத்தில் அமர்ந்திருப்பவளும், கோலாஸூரர்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பவளும்,
நம் சகல பாவங்களையும் நீக்குபவளுமான மஹாலக்ஷ்மியை வணங்குகிறேன்.
ஸர்வக்நே சர்வ வரதே ஸர்வதுஷ்ட பயங்கரி
ஸர்வதுக்க ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமஸ்துதே

அனைத்தையும் அறிந்தவளும், அனைத்து வரங்களைக் கொடுப்பவளும், துஷ்ட குணங்களை அளிப்பவளும்,
துக்கங்களை அழிப்பவளுமான மஹாலக்ஷ்மியை வணங்குகிறேன்.
ஸித்தி புத்தி ப்ரதே தேவி புக்திமுக்தி ப்ரதாயினி
மந்த்ர மூர்த்தே ஸதாதேவி மஹாலக்ஷ்மி நமஸ்துதே

சாதனைகள் புரிந்து நல்ல முறையில் வாழ புத்தியை அளிப்பவளும், இந்த உலகில் செழிப்புடன் வாழ்ந்து அவளின் பாத கமலங்களை அடைய அருள்பவளும், மந்திரங்களின் சூட்சும ஸ்வரூபமாக விளங்குபவளுமான மஹாலக்ஷ்மியை வணங்குகிறேன்.

ஆத்யந்த ரஹிதே தேவி ஆதிசக்தி மஹேஸ்வரி
யோகக்நே யோக ஸ்ம்பூ தேவி மஹாலக்ஷ்மி நமஸ்துதே
ஆதியந்தம் இல்லாதவளும், சகல விஷயங்களுக்கு பின்னால் இருப்பவளும்,
யோகமாகப் பிறந்தவளும், யோகத்தால் இணைந்தவளுமான மஹாலக்ஷ்மியை வணங்குகிறேன்.

ஸ்தூல ஸூக்ஷ்ம மஹாரௌத்ரே மஹாசக்தி மஹோதரே
மஹாபாபஹரே தேவி மஹாலக்ஷ்மி நமஸ்துதே
அனைத்து விஷயங்களுக்கும் பின்னால் சூட்சும வடிவத்தில் ஆதார சக்தியாக விளங்குபவளும்,
பயங்கர வடிவத்தில் ருத்ரணியாக விளங்குபவளும், பெரும் சக்தியின் பிறப்பிடமாக விளங்குபவளும்,
அனைத்து பாபங்களையும அழிப்பவளுமான
மஹாலக்ஷ்மியை வணங்குகிறேன்.

பத்மாஸன ஸ்திதே தேவி பரப்பிரஹ்ம
ஸ்வரூபினி
பரமே ஸி ஜகன்மாத: மஹாலக்ஷ்மி
நமஸ்துதே

தாமரை ஆசனத்தில் சாந்தம் தவழும் முகத்துடன் அமர்ந்திருப்பவளும், உயர்ந்த ப்ராமணியாக விளங்குபவளும், இப்பிரபஞ்சத்தின் உயர்ந்த கடவுளாக, தாயாக விளங்குபவளுமான மஹாலக்ஷ்மியை வணங்குகிறேன்.
ஸ்வேதாம் பரதரே தேவி நானாலங்கார பூஷிதே
ஜகத்ஸ்திதே ஜகன்மாத: மஹாலக்ஷ்மி
நமஸ்துதே

தூய்மையின் அம்சமான வெள்ளை உடையை அணிந்திருப்பவளும், பலவித ஆபரணங்கள் அணிந்திருப்பவளும்,
பிரபஞ்சத்தில் தாய்க்குத் தாயாகக் காப்பவளுமான மஹாலக்ஷ்மியை வணங்குகிறேன்.

மஹாலக்ஷ்மியஷ்டகம் ஸ்தோத்ரம் ய :
படேத் பக்திமான் நர :
ஸர்வ ஸித்தி மவாப்னோதி ராஜ்யம்
ப்ராப்னோதி ஸர்வதா

யார் ஒருவர் இந்த மஹாலக்ஷ்மி அஷ்டகத்தை பக்தியுடன் சொல்கிறார்களோ அவர்கள் சகலவிதமான சம்பத்துக்களையும் பெற்று அன்னையின் காலடிகளை அடைவார்கள்.
ஏக காலம் படேந் நித்யம் மஹா பாப
விநாஷனம்
த்விகாலம் ய : படேந்நித்யம் தனதான்ய ஸமன்வித:

இந்த ஸ்லோகத்தை ஒரு முறை சொன்னால் அனைத்து பாவங்களும் நீங்கும்.
இரு முறை சொன்னால் தனங்களையும், தான்யங்களையும் அடைவோம்.
த்ரிகாலம் ய படேந்நித்யம் மஹா ஷத்ரு விநாஷனம்
மஹாலக்ஷ்மீர் பவேந்நித்யம் ப்ரஸன்ன
வரதா ஸூபா

மூன்று முறை சொன்னால் நம்முடைய பகைவர்கள்  அழிவார்கள்.
தினம் தோறும் இதை கூறி மஹாலக்ஷ்மியின் பரிபூரண அருள்
பொங்கிய சாந்த வடிவத்தில் நாம் சகல அனுக்ரஹங்களையும் பெறுவோம்.

தொகுப்பு: குடந்தை நடேசன்

Tags :
× RELATED சகலமும் தரும் லலிதா சகஸ்ரநாமம்