மணல் சரிவு பகுதிக்கு செல்கிறார் கார்த்தி

நடிகர் கார்த்தி நடிக்கும் படம் தேவ். ரகுல் ப்ரீத் சிங் ஹீரோயினாக நடிக்கிறார். ரஜத் ரவிஷங்கர் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 2 வாரத்துக்கு முன் இமாச்சல பிரதேசத்தில் நடந்தது. அப்போது அங்கு ஏற்பட்ட மழை, வெள்ளம் காரணமாக மண்சரிவு ஏற்பட்டது. அதில் பட குழுவினர் சிக்கிக்கொண்டனர். பிறகு ஒருவழியாக படப்பிடிப்பை ரத்துசெய்துவிட்டு சென்னை திரும்பியது படக்குழு.

தற்போது அப்பகுதியில் மழை வெள்ளம் ஓய்ந்த நிலையில் மீண்டும் படக்குழு படப்பிடிப்பை அதே இடத்தில் தொடங்குகிறது. இதுபற்றி கார்த்தி கூறும்போது,’இமாச்சல பிரதேசம் குளுமணாலியில் மீண்டும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது. காட்சியின் பின்னணியில் பனிப்பொழிவு, லேசான மழை இக்கதைக்கு முக்கியம்.

அதனால்தான் அதே இடத்தில் படப்பிடிப்பை நடத்த வேண்டி உள்ளது. அப்பகுதியில் வெள்ளம் வருவதற்கு முன்பாக சில காட்சிகள் படமாக்கப்பட்டன. எனவே எங்களுக்கு அங்கு சென்று மீண்டும் படப்பிடிப்பை தொடர்வதை தவிர வேறு வழியில்லை. தற்போது அங்கு நிலைமை கட்டுக்குள் உள்ளது’ என்றார்.

× RELATED வெளிநாடு செல்வதற்காக கட்டிய 10 கோடியை...