பாலியல் விவகாரத்தில் சிக்கிய பிரபல பாடகர்

பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்கள் மீ டூ என்ற ஹேஷ்டேக் மூலம் சமூக வலைத்தள பக்கங்களில் தாங்கள் பாதிக்கப்பட்ட சம்பவம் குறித்து துணிச்சலாக கூறி வருகின்றனர். மீ டூ ஹேஷ்டேக் உலகம் முழுவதும் பிரபலமாகி வருகிறது. இந்தியாவிலும் பாதிக்கப்பட்ட பெண்களில் பலர் தைரியமாக தங்களது நிலையை கூறி வருகின்றனர். இதில் பல பிரபலங்கள் சிக்கி வருகின்றனர்.

அதேபோல் தமிழ் சினிமாவில் பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டு கூறியுள்ளார். இந்நிலையில் பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்களில் ஈடுபடும் பிரபலங்கள் குறித்து பரபரப்பு குற்றச்சாட்டுகளை பாடகி சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். இதில் தற்போது பாடகர் கார்த்திக் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த குற்றச்சாட்டை பதிவு செய்தவர் பெங்களூரை சேர்ந்த பத்திரிகையாளர் சந்தியா மேனன். இவர் தான் வைரமுத்து மீது முதலில் குற்றச்சாட்டு கூறியவர் ஆவார். இந்த பதிவை ரீட்வீட் செய்துள்ள பாடகி சின்மயி, நேற்று தான் கார்த்திக்குடன் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றேன். ஆனாலும், பாதிக்கப்பட்டவரை நான் நம்புகிறேன். மன்னித்துவிடுங்கள் உங்கள் நேரம் முடிந்துவிட்டது’ என்று சின்மயி தெரிவித்துள்ளார்.

× RELATED சென்னையில் இன்று சன் சிங்கர் இசை...