பாலியல் தொல்லையை அம்பலப்படுத்தும் நடிகைகளுக்கு ஐஸ்வர்யா ராய் ஆதரவு

நடிகைகள் மீதான பாலியல் புகார் பற்றிய ‘மீ டூ’ ஹாஷ்டாக் விவகாரம் சூடுபிடித்து வருகிறது. பிரபல நடிகைகள் பலர் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் குறித்து தினம் தினம் கூறி வருகின்றனர். அதற்கு பல்வேறு நடிகைகள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். நடிகை ஐஸ்வர்யாராயும் இதற்கு தனது ஆதரவை தெரிவித்திருக்கிறார். இதுபற்றி அவர் கூறும்போது,’மீ டூ இயக்கமானது நல்ல அறிகுறி என எண்ணுகிறேன்.

குறிப்பிட்ட எந்த பாலியல் தொல்லை விவகாரம் குறித்தும் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. அப்படி செய்தால் அது நமது தரப்பிலான பொறுப்பற்ற செயலாகிவிடும். இதுவரை கூறப்பட்ட மீ டூ விவகாரத்தில் சில பிரச்னைகளுக்காவது உடனடியாக நீதி கிடைக்கும். எனவேதான் குறிப்பிட்ட எந்த பிரச்னை பற்றியும் இங்கு பேச விரும்பவில்லை. பெண் நியதிக்காக நான் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறேன்.

உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டு என் கைகளில் மைக் கிடைத்ததிலிருந்தே இந்த பணியாற்றி வருகிறேன். இன்றைக்கு உலகம் சுருங்கி விட்டது. இணைய தள வழியாக எல்லோரும் நெருங்கியிருக்கிறார்கள். உலகின் எந்த மூலையிலிருந்தும் தனது கதையை யார் வேண்டுமானாலும் இணைய தளத்தில் பகிர்வதன் மூலம் அதை மக்கள் அறிந்து கொள்ள முடியும். இவ்வாறு ஐஸ்வர்யாராய் கூறினார்.

× RELATED கருத்துக்கணிப்பை ஐஸ்வர்யா ராயுடன் ஒப்பிட்ட ஓபராய்