உத்தமர்கள் தேடி, நாடி வரும் உலகிய நல்லூர்!

பல நூற்றாண்டுகளுக்கும் முன்னரே உலக மக்களுக்கு மானிட வாழ்க்கையின் பல சூட்சுமங்களையும் தங்கள் அரிய உபதேசங்களினால் மக்கள் உணரச் செய்து, தர்ம நெறிமுறையைக் காட்டி அருளிய பெருமை நமது வேதகால மகரிஷிகளையே சேரும்.ஆதலால் தான் H.G.Wells, மாக்ஸ்முல்லர் Prof.L. ஸ்யூவெல் போன்ற மேலை நாட்டு பேரறிஞர்களும், சரித்திர ஆராய்ச்சியாளர்களும் நமது பாரத புண்ணிய பூமியை “உலக நாகரீகத்தின் தொட்டில்’ (Craddle of Human Civilization) எனப் போற்றிப் புகழ்ந்துள்ளனர்.

உலகின் மாபெரும் திருக்கோயில் நமது பாரத தேசம் எனில், அதன் கருவறை தமிழகம் எனக் கூறினால், அது மிகையாகாது. இதற்குக் காரணம், காலத்தின் கொடிய சோதனைகள் அனைத்தையும் கடந்து, இன்றும் தெய்வீகப் பொலிவு குன்றாகும். கண்டவர் வியக்கும் பேரெழிலுடன் திகழும் நமது திருக்கோயில்களே ஆகும்!இத்தகைய, நிர்மாணிப்பதற்கு அறிய அற்புத திருக்கோயில்களில் ஒன்று தான் விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி வட்டத்தில், தெய்வீகப் பேரொளி வீசித் திகழும், உத்தமர்கள் இறைவனைத் தேடி, நாடி வரும் அருள்மிகு பிரகன் நாயகி உடனுறை அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயிலாகும்.

கோயிலின் கலை அழகு!

“கலையிலே கை வண்ணம் கண்டார்…” எனும்படி, கிடைத்தற்கரியதோர் கலைச் சுரங்கமாகவே காட்சியளிக்கிறது, அதன் தற்போதைய இடிந்த நிலையிலும்..!! இடிபாடுகளுக்கிடையே நிமிர்ந்து கம்பீரமாக வானுயர்ந்து நிற்கும் ஏழு(7) நிலை ராஜகோபுரத்தைக் காணும் போது மெய் சிலிர்க்கிறது. காண்போர் உள்ளத்தைக் கலங்க வைக்கிறது.இத்தகைய திருக்கோயிலை நிர்மாணிப்பதற்கு நமது முன்னோர்கள், எத்தனை காலம், எத்தனை பாடுபட்டிருக்க வேண்டும்…? என்று நெஞ்சம் பதை பதைக்கிறது.ராஜகோபுரத்தைக் கடந்து திருக்கோயிலினுள் கால் பதித்த அந்த வினாடியே, நம் கண்களில் படும் மகா மண்டபமும், இடிபாடுகளும், நம்மையும் அறியாமல் கண்ணீர் பிரவாகமாகப் பெருக்கெடுக்கிறது.

“கலைக்களஞ்சியமாக ஒளிவீசிப் பிரகாசிக்கும் இத்தெய்வீக சன்னிதானத்தை பொலிவிழந்து பார்ப்பதற்கு நம் இதயம் தவிக்கிறது.அழகிற்கு அழகு செய்யும் திருக்குளம் நெஞ்சைக் கலக்குகிறது.நொந்த உள்ளத்துடன், மேலும் உள்ளே செல்கிறோம். மகா மண்டபத்தின் கலை நுட்பம் வர்ணனைகள் அனைத்திற்கும் அப்பாற்பட்டதாகத் திகழ்கிறது. வடித்த சிற்பியின் திறனை விவரிப்பதற்கு வார்த்தைகள் இல்லை!

திருக்கோயிலில் புராதனப் பெருமை!

திருக்கோயிலின் ஏராளமான கல்வெட்டுக்களிலிருந்தும், கற்சுவர்களின் மீதுள்ள வெட்டெழுத்துக்களிலிருந்தும், இதன் கருவறையும், அர்த்த மண்டபமும், கி.பி.1184-ல் சோழ மண்டலத்தை ஆண்ட “மூன்றாம் குலோத்துங்கன்” என்ற பட்டப் பெயரைக் கொண்டு விளங்கிய உடைய வீரராஜேந்திர சோழன் மன்னனால் நிர்மாணிக்கப் பட்டவை என்பது தெரிகிறது.சோழ மன்னர்களின் ஆட்சிக்காலம் குன்றியபோது இன்றும் கலைப் பெட்டகமாகத் திகழும் இம்மாபெரும் திருக்கோயிலை, அப்போது இப்பகுதியை ஆண்ட மகதவாணர்களின் கீழ்குறு நில மன்னர்களாக ஆட்சிபுரிந்த “செழியத் தாரையர்கள்” மாபில் வந்த அந்தால தீர்த்த செழியன் தான் இத்திருக்கோயிலின் ஏழு நிலை ராஜகோபுரத்தையும் மதில்களையும் எழுப்பித்து, அழியாப் புகழ் எய்தினான் என்பதை சிற்றிலக்கியமான ‘மஞ்சரி’ விவரித்துள்ளது.

‘திருவாணிவாது’செழியத் தரையர்களில் ஒருவரான ‘கங்காதரச் செழியக் தனயென்’ மீது பாடப்பட்ட நூலான ‘திருவாணிவாது’, உலகிய நல்லூர் திருக்கோயில் பற்றிய சுவையான நிகழ்ச்சி ஒன்று குறிப்பிடப்பட்டுள்ளது.ஒரு சமயம் திருமகளும், கலை மகளும் தங்களுக்குள் யார் உயர்ந்தவர் என்பது பற்றியும், செல்வம் சிறந்ததா? அல்லது கல்வி சிறந்ததா என வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், முடிவில் உலகிய நல்லூர் அம்பிகை ‘பெரிய நாச்சியார்’ முன் வாதம் நடந்ததாகக் குறிப்பிடுகிறது. இரு தேவியரும் தத்தம் கருத்தை வலியுறுத்தி, உலக நடைமுறையையும், நூல்களையும் மேற்கோள் காட்டி வாதிட்டதாகவும், முடிவில் தற்காலப் ‘பட்டி மன்றம்’ போன்று நல்லூர் இறைவி தீர்ப்பு வழங்கியதாகவும் அந்நூலில் உள்ளது.

“வீட்டின் பத்திற்குக் கல்வியும், செல்வமும் ஆகிய இரண்டுமே அவசியமானது. இது அவரவர் வினைக்கேற்ப அமைகின்றது. எனவே இதுபற்றி வாதிடுவது அவசியமற்றது என அம்பிகை தீர்ப்பு வழங்கியதாகவும் அந்நூலில் உள்ளது.

சோழ மன்னர்களின் நன்கொடைகள்!

கி.பி.1184-ல் மூன்றாம் குலோத்துங்க மன்னனின் ஆணைப்படி, இத்திருக் கோயிலுக்கு 1000 குழி நிலமும், 1224-ல் மூன்றாம் ராஜராஜ சோழனின் ஆணைப்படி, வாணவ கோவரையனால் 4 வேலி நிலமும், இறைவனின் தொண்டிற்காக விடப்பட்டன என கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன.அம்பிகையின் தெய்வீக எழிலும், உதடுகளில் தவழும் புன்னகையும், ‘அஞ்சேல்’ என்று அபயமளிக்கும் திருக்கரங்களும், சப்த ரிஷிகளும் போற்றி வணங்கும் இருதிருவடித் தாமரைகளும், ‘எம்மிடம் வந்த பின் கவலை ஏன்….?’ எனக் கேட்கும் பாவனையில் நம் துன்பங்கள் அனைத்தையும் அந்த வினாடியே மறந்து விடுகிறோம். அப்படியோர் சக்தி, அண்டங்கள் அனைத்திற்கும் அன்னையின் திவ்ய தரிசனத்திற்கு!!

அன்னையின் எழிலுக்கு ஈடாகத் திகழ்கிறான் அர்த்தநாரீஸ்வரப் பெருமான்! ‘கண்டவர் விண்மலர்…!’ என்பார்களே  அதற்கு ஏற்றவாறு தரிசனம் தந்தருள்கிறான் ஈசன்!! “கல்லினைப் பூட்டி, கடலினுட் பாய்ச்சினும் ஒற்றுமையாவது நமசிவாயமே..! என்று பாடலின் உட்பொருளாக, கண்ட அந்த வினாடியே நம்மை ஆட்கொண்டு விடுகிறான் அம்மையப்பன்! பிறவியில் பெறற்கரிய பேறு இப்பெருமானின் அருட் தரிசனம்!

கல்லும் கதறி அழும்!

காலம் அனைத்தையும் கடந்து, கொடுமைகள் அனைத்தையும் தாங்கி, கயவர்களால் கற்பழிக்கப்பட்டும், புனித தெய்வீகப் பொலிவு குன்றாமல் கண்ணீர் வடித்து நிற்கும் கற்பிற்சிறந்த கன்னிபோல் இடிக்கப்பட்ட நிலையிலும், தன் தெய்வீக அழகு குறையாது, ‘கல்லும் கதறி அழும்’ நிலையில் இன்றும் காட்சியளிக்கும் இத்திருக் கோயிலை எவ்வீதமாவது புனர் நிர்மாணம் செய்து, குடமுழுக்கு விழாவை சிறப்பாக நடத்த பக்தர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து மக்களின்  ஆன்மிக சேவையில், திரு முருகன் தெய்வீகப் பேரவை என்ற அமைப்பு, இரவு பகல் பாராது,.

பல தலைமுறைகளுக்கு இந்த புண்ணிய பலன் துணை நிற்கும். வகையில்  இறையன்பர்கள் தங்களால் இயன்ற அளவிற்கு சிரமப்படாமல், பண உதவியும், பொருள் உதவியும் செய்து கோடானு கோடி பொருள்  கொடுத்தாலும் கூட நிர்மாணத்திற்கரிய இத்தெய்வீக பொக்கிஷத்தை அழிவிலிருந்து காப்பாற்றும்படி பணிவன்புடன் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

 இத்தெய்வீக வாய்ப்பு, நன்கொடைகளை அனுப்ப:அருள்மிகு பிரகன் நாயகி உடனுறை, ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் அறக்கட்டளை, கரூர் வைஸ்யா வங்கி, சின்ன சேலம் (கள்ளக்குறிச்சி) Current   A/c No: 1695135000005942

IFSC Code: KVBL0001695.

பகவத் கைங்கர்ய, ஜோதிட ஸாகர சக்கரவர்த்தி

A.M.ராஜகோபாலன்

Related Stories: