மாங்கல்யம் தந்துனானேந...’ என்ற மந்திரம் ஓதித்தான் தாலி கட்ட வேண்டுமா?

ந்திரம் என்பது வேறு, சம்பாஷணை என்பது வேறு. சமஸ்கிருத மொழியில் உச்சரிக்கப்படும் அனைத்து சம்பாஷணைகளையும் நாம் மந்திரங்கள் என்று புரிந்துகொண்டிருக்கிறோம். நீங்கள் குறிப்பிட்டிருக்கும் இந்த வரிகள் மந்திரம் அல்ல, அது ஒரு ஆசிர்வாத வசனம். மணமகன், மணமகளை அதாவது தனக்கு மனைவியாகப்போகிறவளுக்கு மாங்கல்யக் கயிற்றினைக் கட்டி தனக்கு பந்தமாக்கிக் கொள்ளும்போது சொல்லும் உறுதிமொழி இது.

“மாங்கல்யம் தந்துநானேந மம ஜீவன ஹேதுநா, கண்டே பத்நாமி சுபகே த்வம்ஜீவ சரத: சதம்” - ‘மங்களகரமான பெண்ணே, நான் வாழ்வதன் நோக்கம் நிறைவேறுவதற்காக, அதாவது தர்மமான முறையில் எனது வாழ்க்கை அமைவதற்காக இந்தக் கயிற்றினை உனது கழுத்தினில் அணிவிக்கிறேன், நீ நூறு ஆண்டுகள் வாழ்வாயாக’ என்று மணமகளை ஆசிர்வதித்து மங்கல நாணை மணமகன் அவளது கழுத்தில் முடிச்சிடுகிறான். இத்தனை சிறப்பு வாய்ந்த இந்த வரிகளை புரோஹிதர் மட்டும் சொன்னால் போதாது, புரோஹிதர் ஒவ்வொரு வார்த்தையாகச் சொல்லிக் கொடுக்க மணமகன் மணமகளைப் பார்த்து அக்ஷரம் பிசகாமல் இந்த வரிகளைச் சொல்லி மங்கலநாணை அணிவிக்க வேண்டும். அப்பொழுதுதான் தாலிகட்டும்

சம்பிரதாயம் முழுமை பெறும்.

Related Stories: