×

உயிர்த்த ஆண்டவர் ஆணை உரிமை அளித்தல்

அருள்நாதர் இந்த உலகில் வந்த காரணம் இறையரசை அல்லது ஒரு சமத்துவ சமுதாயத்தை நிறுவுவதற்கு. அதற்காக தலைமையாகக் கொண்டு ஒரு இயக்கத்தை ஆரம்பித்தார். இந்த இயக்கம் யூத மதத்திலும், யூத சமூகத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை அகற்றி ஒரு சமத்துவ சமுதாயத்தை உருவாக் குவதற்காகவே. அந்த அடிப்படையில் ஏராளமானோர், இந்த இயக்கத்தில் சேர்ந்தார்கள். முதலாவது 12 சீடர்கள், 70 சீடர்கள் பின்பு உலகம். எல்லாம் இவன் பின்னால் போயிற்றே என்ற திருவாக்கியத்தில் உலகம் என்கின்ற வார்த்தை எண்ணற்ற மக்களைக் குறிக்க பயன்
படுத்தப்பட்டுள்ளது (யோவான் 12:19)

சமத்துவ சமுதாயத்தை உருவாக்க இயேசுவின் தலைமையில் ஒரு பேரியக்கம் உருவாக்கப்பட்டது. பின்பு இயேசுநாதரை படுகொலை செய்த பின்னர் இந்தப் பேரியக்கம் அழிந்துவிடும் என்று அதிகாரவர்க்கத்தினர் எண்ணினர். ஆனால் இயேசுவின் உயிர்த்தெழுதல் முதல் அந்த பேரியக்கத்தை உயிரடைய செய்தது. இந்த நிலையை தான் மரித்து உயிர்த்த இயேசு தன் இயக்கத்தில் உள்ளவர்களுக்கு அதிகார ஆணையை கொடுத்தது. தான் எண்ணின சமத்துவ சமுதாயத்தை அல்லது இறையரசை உருவாக்க திட்டமிட்டார். எனவே தன் சீடர்களை ஓரிடத்தில் வரவழைத்து விண்ணுலகிலும், மண்ணுலகிலும் அனைத்து அதிகாரமும் எனக்கு கொடுக்கப்பட்டிருந்தது. நீங்கள் போய் அனைத்து மக்களினத்தையும் சீடராக்குங்கள் என்றார் சமத்துவ சமுதாயத்தை உருவாக்க நான் உங்களுக்குக் கட்டளையிட்டயாவற்றையும் மக்கள் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள் மத்தேயு 28:16-20 என்றார்.

உலகமெங்கும் போய் படைப்பிற்கெல்லாம் சமத்துவ சமுதாயம் இயேசுவின் தலைமையில் உருவாக்கப்பட இருக்கிறது என்ற நற்செய்தியைப் பறைசாற்றுங்கள். என் பெயரால் சாதி பாகுபாடு, இனப்பாகுபாடு, ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு, பாலின பாகுபாடு என்கின்ற பேய்களை ஓட்டுங்கள் மத்தேயு 16:15-18.
சமத்துவ சமுதாயத்தை அல்லது இறையரசை உருவாக்க கடவுள் என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்புகிறேன். (யோவான் 20:20) என்று தன் சீடர்களுக்கு ஆண்டவர் உரிமையை வழங்கினார்.

மன்னிப்பின் அதிகாத்தை சீடர்களுக்கு தன் கோட்பாடுகளை பின்பற்றுபவர்களுக்கு அளிக்கிறார்.“எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ அவை மன்னிக்கப்படா” என்றார்.மன்னிப்பின் அதிகாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரியது அல்லது பாதிக்கப்பட்டவர்கள் கொடுக்கும் மன்னிப்பு தான் சரியானது உண்மையானது. மண்ணுலகில் பாவங்களை மன்னிக்க மனுஷகுமாரனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்று அருள்நாதர் இயேசு கூறுகின்றார். மத்தேயு 9:6.

இதில் மனுஷகுமாரன் என்பது கொடுமைக்குள்ளாக்கப்படுகிறவர்களைப், பாதிப்புக்குள்ளானவர்களை மற்றும் ஒடுக்கப்பட்டு இழிநிலையில் உள்ளவர்களையும் குறிக்கப் பயன்படும் சொல். இயேசுநாதர் தன்னை இழிநிலையில் உள்ளவர்களோடு இணைத்துக் கொள்கிறார். எனவேதான் உண்மையான மன்னிப்பு என்பது இழி நிலையில் உள்ளவர், பாதிக்கப்பட்டவர் கொடுமைக்குள்ளாக்கப்படுபவர் வழங்குகின்ற ஒன்று.

இயேசுவுக்குப் பின்னர் சீடர்கள் அல்லது தன்னை பின்பற்றுபவர்கள் பாதிப்புக்குள்ளாக போகிறார்கள். கொடுமைக் குள்ளாக்கப்பட போகிறார்கள் என்பதை இயேசு
விளக்குகிறார். மத்தேயு 10:17-18 மாற்கு 13:9-11 லூக்கா 21:12.எனவே ஏற்றத்தாழ்வுகளை எதிர்த்துப் போராடும்போது பாதிப்புகளும் கொடுமைகளும் ஏற்படும் அல்லது சமத்துவ சமுதாயம் அமைக்கப்படும் போது பாதிப்புகளும், கொடுமைகளும், சித்திரவதைகளும் ஏற்படும். எனவே உங்கள் கொடுமைகளுக்குள்ளாக்குபவர்களை மன்னிக்கவும் மன்னியாதிருக்கவும் உங்களுக்கு அதிகாரம் அளிக்கிறேன் என்று உயிர்த்தெழுந்த ஆண்டவர் கூறுகிறார்.

Tags :
× RELATED சுந்தர வேடம்