வெங்கமாம்பா-3

ஆழ்வார் பாடியது போல், திருமலை தெய்வத்தை நெஞ்சிலே ஏற்றி வணங்கினாள். தான் இயற்றிய பாடல்களை தட்டில் வைத்து தலை மீது சுமந்து மாடவீதிகளில் பாடல்களை விற்றார் அவளின் செயலைக் கண்டு வியந்தோர்.பொறாமை கொண்டனர். ஒரு சமயம், ரதசப்தமி அன்று எம்பெருமான், அலங்கார பிரியனான வேங்கடேசனை, அழகுபடுத்தி, தலை முதல் பாதம் வரை அணிகலன் பூட்டப் பட்டு, பீதாபர ஆடைகள் அணிவித்து, நறுமண பூக்களை மாலைகளாக இட்டு, வாசனைத் திரவியங்கள் உடலெங்கும் மணம் பரவிட, அலங்காரத்துடன் பல்ல ரதத்தேரில் அழகுடன் கம்பீரமாக பவனி வர, மக்கள் மகிழ்ச்சியில் தாமரைக் கண்ணன், திருமகளின் தலைவன். ஒப்பற்ற அன்பின் வாசல்யல், கோலாகல அழகைக் கண்டு களிக்க ரதம் வெங்கமாம்பா வீட்டு வாசலில் நின்று விட்டது. எப்படி இழுத்தாலும் வண்டி இம்மி அளவும் நகர மறுத்தது. என்ன செய்வது ஏது செய்வது என்று புரியாமல் தவித்தனர் வேதியர்கள்.

இறுதியில் ஒருவர், வெங்கமாம்பா ஆரத்தி எடுக்கச் சொல்லுங்கள். வண்டி இயல்பாக நகரும் என மொழிந்தார். இறைவனைக் காணக் கூடாது என்று தடைவிதித்த வேதியர்கள், வெங்கமாம்பாவை முன் வந்து, எம்பெருமானுக்கு ஆரத்தி எடுக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார்கள். அவர்கள் வேண்டுகோளை ஏற்று ரதத்தில் அமர்ந்திருந்த ஸ்ரீமந் நாராயணனுக்கு கீர்த்தனை பாடியவாறு ஆரத்தி எடுத்தாள். தேவர்களும், மும்மூர்த்திகளும், பஞ்சபூதங்களும் சந்தோஷம் அடைந்தனர். ஒரு பெண் தனித்து, கலியுகத்தில் யோக நிலை பெற்று எல்லா உயிர்களும் நிம்மதியுடன் வாழ வேண்டுமென்ற நல்லெண்ணம் உயர்ந்து நின்றதை எண்ணி பூரித்தனர்.

காற்று, தென்றலாக வீசியது. நாற்புறமும் நற்பொருள் வாசனை வந்தது. கோவிந்தா! கோவிந்தா! வெங்கட ரமணா! தீனதயாளா! கோவிந்தா என்ற நாமகீர்த்தனம் எங்கும் கோஷமிட்டு குரலெடுத்து பாடினர். அடுத்த நொடி கயிற்றைப் பிடித்து தேரை இழுத்தனர். தேர் கட கடவென அதிவேகத்துடன், சந்தோஷத்துடன் தேர் நகரத் தொடங்கியது. வீதிஉலா வந்தவர்கள் அனைவரும் திருமலையப்பனை வடம் பிடித்த மகிழ்ச்சியில், உற்சாகமாக காணப்பட்டார்கள்.

அன்று முதல் வருகின்ற பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்து, அருள் பெறுவதுடன் வெங்கமாம்பாவின் அருளைப் பெற அவளிடம் சென்று தரிசனம் பெற்றனர். சில சமயங்களில் வெங்கமாம்பா, பக்த ஜனங்களுக்கு திருமலை நாதனின் பெருமைகளையும், நரசிங்க பெருமானின் கருணை உள்ளத்தையும், ஸ்ரீகிருஷ்ணனின் லீலைகளையும் அணுஅணுவாக விளக்கமளித்து, தேன் சொட்டும் பலாச்சுளையை அனுபவித்து உண்பதுபோல், தேனினும் இனிய இன்பமான குரலில் கதாகாலட்சேபம் செய்தாள்.

கேட்டோர்களின் உள்ளம், சர்க்கரைப் பாகாய் கரைந்தது. அத்துடன், அவர்களின் கர்மவினைகளும் கரைந்தது. துன்பம் நீங்கி, லேசான மனதுடன் திரும்பினார்கள்.

ஆந்திர மாநிலத்தில், 1730 ஆம் ஆண்டு, ஏப்ரல் 20ல் பிறந்தவள். 87 ஆண்டுகள் உயிர் வாழ்ந்தாள். வாழ்ந்த காலத்தில் எண்ணற்ற நூல்களை இயற்றினாள்.

அவர் எழுதிய நூல்கள்.

1. விஷ்ணு பாரிஜாதம் 2. செஞ்சு நாடகம், 3. ருக்மணி நாடகம் மற்றும் கிருஷ்ண ஜலகிரீட விலாசம், 5. முக்தி காந்த விசாலம், 6. யக்ஷஷ (யக்‌ஷ்) கானம், 7. கோபி நாடகம், 8. இராம பரிநயம் 9. பரீபாகவதம் ஸ்ரீகிருஷ்ண மஞ்சரி, 11. தத்வ கீர்த்தனலு, 12. வசிஷ்ட இராமாயணாலு, 13. ஸ்ரீவெங்கடேச மகாத்மியம், 14. அஷ்டாங் யோகாசாரம், 15. தரி கொண்ட நரசிம்ம சதகம், 16. நரசிம்ம விலாச கதா, 17. சிவ நாடகம், 18. பால கிருஷ்ண நாடகம், 19. ராஜ யோக (அ) கம்ருத சாரம் 20. தத்விப காவியம் என்று எண்ணற்ற நூல்களை இயற்றினார்.

அவை படிப்பதற்கு எளிய நடையினும் புரிந்துகொள்வதற்கு ஏற்ப, சொற்களை அமைத்துள்ளார். பாலபாஷைகளை குழந்தைகளுக்குப் புரியும்படி, அவர்கள் படித்தால் மனதில் பதியும் வண்ணம் எழுத்துகள் முத்துகளாக வடித்துள்ளார். தாம் எழுதிய கீர்த்தனைகள், இறைவனுக்கு சமர்பிக்க விரும்பினார். கண்கள் பஞ்சடைந்து, உடல் சுருங்கி, முடியெல்லாம் வெளுத்து, பஞ்சு பொதிகையாக வெளுத்து, சப்த நாடிகளும் அடங்கும் தருணத்தில், திருமலைநாதன் ஏழுமலை சிகரத்தின், சக்கரபாணி வெங்கடேசன் கோயிலில் நின்று, தம் கீர்த்தனைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும், தன் குலத்தைச் சார்ந்தவர்கள், மணி அடித்து அதை கேட்க வேண்டும் என்றும், திருமலை நாதனிடம் விண்ணப்பிக்க, தனக்கு பிறகு ஆரத்தியை யார் எடுப்பார் என்று கேட்டாள் வெங்கமாம்பா.

எம்பெருமான் கோவிந்தன் கூறினார், ``ஓர் ஆண் மகனைத் தத்தெடுத்து அவன் மூலமாக கீர்த்தனைகளை எழுதி, ஓலைச் சுவடிகள் எடுத்து தந்தால் பெற்றுக் கொள்கிறேன்’’ என்று கூறினான்.தத்துப் பிள்ளைக்கு எங்கு செல்வேன்? என்று என்னும்போது, நான் அனுப்புகிறேன் என்று ஒரு ஆண்குழந்தை (பால்மணம் மாறாத பாலகன் வருகிறான்) அவனை உற்று நோக்குகிறாள். என்ன விந்தை?! சிறு வயதில் மங்கல சூத்திரம் அணிவித்து கரம்பிடித்த வெங்கடாசலபதி, அரவம் தீண்டி இறந்தவள்.

இன்றுவரை தன்நம்பிகையை நெஞ்சில் விதைத்த உத்தமன். தன் கணவன், தத்துப் பிள்ளையாக வருவதை அறிந்து அவனை மகனாக ஏற்று பூஜைகள் செய்து வரவும், வானுலகிலுள்ள லோகமாத ஸ்ரீமகாலட்சுமி தேவியே வெங்கமாம்பா தட்டில் வைத்து கொடுக்க, அதனைப் பெற்றுக்கொண்டாள். தன் கண்களுக்கு தாயாரின் கருணைப் பார்வை, தன் மீது பொழிந்ததை எண்ணி பூரித்தாள்.

தானே சுமந்து சென்று கோயில் வாசலில் நின்றிருந்த கணவனிடம் (வெங்கடேச பெருமாள்) கொடுக்க அதனைப் பெற்று மீண்டும் தாயாரின் தலைமீது வைக்க, அத்தட்டை தலையிலே சுமந்த பெருமாளும் பிராட்டியும், நடந்ததை வெங்கமாம்பா கண் குளிர கண்டு, யாருக்கும் கிடைக்காத பெரும் பாக்கியம் தனக்கு கிட்டியதை எண்ணி மனம் உவகை பொங்கியது. ஊர் மக்கள் அனைவரும் திரண்டு திருமலை வெங்கடேசனின் ஆனந்தநிலையத்தில் நுழைந்தனர். கருவறைக்குள் நுழைந்ததும், பெருமாளும் பிராட்டியும் மறைந்தனர். கண்முன்னே ஓலைச்சுவடிகளை சுமந்து வந்த தாயாரின் மகிமையை எண்ணி மனம் நெகிழ்ந்து, கோவிந்தா! கோவிந்தா!! ஏழைகளின் துன்பத்தை தீர்க்கும் பரந்தாமா! அழைத்த குரலுக்கு ஓடி வரும் கருணை

உள்ளம் கொண்ட ஸ்ரீமந் நாராயணா! என்று திருநாமங்கள் சொல்லி, தம்மை மறந்து பஜனைச் செய்து ஆழ்ந்தனர்.

கருணைக் கடல் கார்முகில் வண்ணன் நீலமணிவேணன். வெங்கமாம்பாவை, `ஆத்மா திருத்துழாய்’ வடிவமாக மாறினாள். இறைவன், ``தாயாயே! அம்மா…. வெங்கமாம்பா’’… என்று குரலிட்டு அழைத்தார். திருமாலின் திருவடியில் சங்கமமானாள். எடுத்த பிறவி புனிதமடைய திருமாலையே சரணம் அடைந்தாள். கைங்காய் பணியை மேற்கொண்டாள்.

வைணவத்தின் அடிமையான அடியார், பதினெட்டாம் நூற்றாண்டில் 1730ல் ஏப்ரல் மாதம் பிறந்தவள், 1817 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் இறைவனுடன் மானசீகமாக கலந்தாள். பூத உடல் விட்டு எம்பெருமான் திருவடியில் சங்கமித்தாள். வெங்கமாம்பா புரட்சிப் பெண். கைய்மை ஏற்க மறுத்து, மங்கலத்தை நீக்காமல் வாழ்ந்தவள். கவித்துவம் நிறைந்த யோகி, பெண்கள் போற்றும் குணவதி, தாய்மை நிறைந்தவள், துணிச்சல் உடையவள். அதனால்தான், குகையில் அமர்ந்து தியானம் செய்து தவப்பயனைப் பெற்றவள். 87 ஆண்டுகள் வாழ்ந்தவள். அவளின் கம்பீரத்தைக் கண்டு தலைவணங்கி மதிப்புடன் போற்றினர். இன்று, இவரின் பாடலோடு கற்பூர ஆரத்திகளோடு நடை சாற்றும் வழக்கம் நடைமுறைக்கு வந்தது. அதனால்தான் பெருமாளிடம், எனக்கு பின் யார் ஆரத்தி பாடுவர் என்று ேகட்டாள்.

இன்றும், ஏகாந்த சேவையில் அதாவது, நடை மூடப்படுவதற்கு முன் எடுக்கப்படும் ஆரத்திக்கு ``வெங்கமாம்பா ஆரத்தி’’ என்றே பெயரிட்டனர். வெங்கமாம்பா விரும்பிய

படியே ஆரத்தி எடுத்து, எம்பெருமானின் மனதை குளிர்விக்கின்றனர். திருமலை மாடவீதிக்கு அருகிலுள்ள பிருந்தாவனத்தில், இவரின் பூத உடல் அடக்கம் செய்யப்பட்டு உள்ளது.

SVBNR உயர்நிலைப் பள்ளி, திருமலைக் கோயில் நிர்வாகம், பயன்படுத்தி வருகின்றன. திருமலைநாதனை தரிசிப்போர், நிச்சயம் `தரி கொண்ட வெங்கமாம்பாவை’ வணங்கி ஆசிபெறுporவது நல்லது. `மாத்ரு தரி வெங்கமாம்பா’ என்ற பெயரில் திருமலையில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகின்றது.

(முற்றும்)

பொன்முகரியன்

Related Stories: