வெங்கமாம்பா-2

திரைச் சீலையை விலக்கினால் பேசுவேன் என்றாள் வெங்கமாம்பா. கைய்மை ஏற்ற பெண்கள் முகத்தில் விழிப்பதில்லை. கணவன் இறந்த பின்பு கூந்தல் முடிக்கக் கூடாது. தலைமுடியை இறக்கி மொட்டை அடித்துக் கொள்ள வேண்டும். அதுதான் தர்மம் என்று கூறினார். மடாதிபதியின் உரையைக் கேட்டவள்.  சுவாமி! தங்களின் கட்டளையை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், சிறிய விண்ணப்பம் அதனைக் கேட்டருள வேண்டுகிறேன். சுற்றி நின்றிருந்த மக்கள் மடாதிபதியின் சக்தியைப் போற்றினர். அவள் மீது வன்மம் கொண்ட துவேஷர்கள் பூரிப்பில் திளைத்தனர். ஆனால், அவளின் பண்பை உணர்ந்தோர் கண்களில் வெந்நீர் பொங்கி வழிந்தன. உன் தரப்பு செய்தியைக் கூறு என்றார். மொட்டை அடித்துக் கொண்டால், மீண்டும் கூந்தல் வளராது எனில் தவறாது ஒப்புக் கொள்கிறேன். அடிகளாருக்கு சினம் உச்சிக்கு ஏறியது. ஆணவம் முதிர்ந்த நங்கையை காண வேண்டும். அவள், என் பாதத்தில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கடும் கோபத்துடன் மொழிந்தார்.

அதற்கு முன்பாக நீங்கள் அமர்ந்திருக்கும் ஆசனத்தை விட்டு எழுந்தருள வேண்டும். கால தாமதம் விபரீதத்தை உண்டாக்கும்.  தன்னையே எழுந்திருக்கச் சொல்லும் அளவிற்கு மமதையா? என்று வெறுப்புடன் எழுந்தார் மடாதிபதி. என்ன ஆச்சரியம்! அப்பப்பா! சுற்றிச் சூழ்ந்திருந்த மக்கள் கண்கள் விழிகள் விரிந்தன. வாயைத் திறந்தோர் ஆ… வென இயல்பாக மூடவும் மறந்தனர்.அவ்விடம் எங்கும் புகை மண்டலம்! மடாதிபதி வியப்பின் எல்லையைக் கடந்தார். திரைத் சீலை அறுந்து விழுந்தது.

மடாதிபதி அமர்ந்திருந்த நாற்காலி தீப்பிடித்து எரிந்தது. திரை விலகியதால் வெங்கமாம்பா திருமுகத்தின் தெய்வீகப் பொலிவைக் கண்டார். அவருடைய கண்களுக்கு சிறுவன் அழைத்ததும் எங்கே தோன்றுவது என எல்லா தூண்களிலும் காத்திருந்த கோலரிநாதன். நாளை என்பது நரசிம்மனிடம் இல்லை என்று எங்கு நிறைந்து அருள்பாலிக்கும் கருணாமூர்த்தி ஓடி வந்து சிறுவன் பிராலாதனை காத்தாரே! அந்த சிறுவன் பிரகலாதன், வெங்கமாம்பா வடிவில் தோன்றி நின்றான். அக்காட்சியைக் கண்ட மடாதிபதி தெய்வாம்சம் பொருந்தியவள். இவள் தரிசனம் கிடைக்கப் பெற்ற தனக்கு பெரும் பாக்கியம் செய்திருக்க வேண்டுமென போற்றினார்.  மக்களுக்கு தீங்கு செய்ய மடாதிபதி உடனே கிளம்பினார். ஆனால் துவேஷம் பாராட்டியோர் மாயா ஜால வித்தை காட்டியது போதும்.

ஊர் நடுவே மொட்டை அடித்துக் கொள்ள சம்மதித்த பின்னர், பின் வாங்குவது முறைமை ஆகாது என்று கூக்குரல் இட்டனர். அவர்கள் வழியைத் தொடர சிறிதும் அச்சப்படாமல் நடந்தாள். நாவிதனை அழைத்து வரச் செய்து வெங்கமாம்பா முன்னர் நிற்க வைத்தனர். மக்கள் அடுத்து என்ன நடக்கும் என்று ஆர்வமாக இருந்தனர். தலையைக் குனிந்து விரிந்த கூந்தல், வானத்து நீலம் போற்று கறுகறுவென கறுத்து நீண்டு தொங்கியது.

நாவிதன் அருகே செல்ல ஓர் அடி எடுத்து வைக்க சற்று தடுமாற்றம் அடைந்தான். தலையில் கை வைத்ததும் சாமுண்டி தெய்வம் அவன் கண்ணெதிரே தோன்றினாள். அலறி அடித்து அவளை இருகரங்கள் குவித்து வணங்கினான். தாயே பரமேஸ்வரி என்னை மன்னித்து அருள் செய்யம்மா என்று வேண்டினான். கண்ணபிரானை நோக்கி இருமாதர்கள் பல்லாண்டுகளாக தவம் இருந்தனர். ஒருத்தி கண்ணனை மகனாக பெற விரும்பினாள். தேவகிக்கு மகனாக கர்ப்பத்தில் உதித்து ஈன்றெடுத்தாள். அதுவே அவள் செய்த புண்ணியம். யசோதையிடம் ஓர் இரவில் இடம் மாறியவன் பல வித லீலைகள் புரிந்தான். யசோதை பெற்ற புண்ணியம் அதுவே வகுளமாதேவி சீனிவாச கல்யாணத்தைக் கண்டு மகிழ்ந்தாள். பெற்றெடுக்கவில்லை, பாராட்டி சீராட்டி பாலூட்டு வளர்க்கவில்லை. தாயின் அன்பை ஏற்றாள். அவ்வாறே வெங்கமாம்பா ஒவ்வொரு உயிர்களிடத்திலும் தாய் போல பொழிந்தாள்.

உயர்ந்தவன், தாழ்ந்தவன், சாதி, மதம், பேதம் அத்தனையும் தகர்த்து எறிந்தாள். ஏழைகளுக்கும், நோயால் பீடித்தோருக்கும் உதவி புரிந்தாள். அவ்வாறே, ஒருநாள் முகமதியன் வெயிலில் பசியால் வாடி கண்கள் இருண்டு வீதியில் விழுந்தான். அவ்வழியாக பலர் நடந்து சென்றனர். ஆனால், வெங்கமாம்பா மனித நேயத்துடன் தண்ணீரை அவனுக்கு கொடுத்து அருந்தச் செய்து தாய்மையை வெளிப்படுத்தினாள். அதைக் கண்ணுற்ற பகை மனம் கொண்டோர் பலவாறு துவேஷித்து அவரை விட்டு விரட்ட முற்பட்டனர். அதற்கு மேல் அங்கிருக்க விரும்பாமல் திருமலைக்கு சென்றாள். அங்கு தும்புரு முனிவர் தவம் செய்த குகையில் அமர்ந்தாள். பல மாதங்களாக யோக நிஷ்டையில் ஆழ்ந்தாள்.

கொடிய விலங்குகள் நடமாடும் இடத்தில், இரவு பகல் தெரியாமல் தொடர் நிஷ்டையில் அமர்ந்தாள். மகள் காணாததால் பெற்றோர் கவலை அடைந்தனர். அவள் இறந்து விட்டாள் என்றே முடிவு கட்டிய போது, ஒரு சிறுவன் மாடுகளை மேய்க்கும் சமயத்தில், `குகையில் அக்கா அமர்ந்திருந்ததை கண்டதாக’ மொழிந்தான். அனைவரும் திரண்டு அங்கு செல்ல வெங்கமாம்பா தியானம் கலைந்து எழுந்தாள். பெற்றோர் ஆரத்தழுவி மகிழ்ந்தனர். வீட்டிற்கு அழைத்தனர்.

அவளோ மறுத்து விட்டாள். என் வீடு ஏழுமலையான் சந்நதி அல்லது அவனை சுற்றியுள்ள தளமேயாகும் என்று உறுதியாக மறுத்து கூறினாள். அதன் பின்பு திருமலை கோயில் வாசலில் அமர்ந்து பாடல்கள் புனைந்தாள். இராமபாபரின் சீடர் ஆத்மா முன் கனவில் தோன்றினார் திருமலை வெங்கடேசன். தன்னாதரவு இன்றி பெண்ணாக தனித்திருக்கும் வெங்கமாம்

பாவிற்கு தங்கவும், உணவு உண்ணவும் வழி செய்யுமாறு கூறி மறைந்தார்.

உடனே பாபா, தன் சீடன் கூறியவாறு சீனிவாசபுரத்தில் தங்குவதற்கு குடில் அமைத்தார். வெங்கமாம்பா நந்தவனம் வைத்து, தினமும் மாலை (திருத்துழாய்) தொடுத்து வேங்கடவனுக்கு கைங்கர்யம் செய்து வந்தாள். ஆச்சாரம் ஒழுகி வாழும் வேதம் ஓதுவோருக்கு, வெங்கமாம்பாவின் கையம்மை நோன்பு கைக்கொள்ளாமல் மங்கள சின்னத்துடன் திகழ்வது பிடிக்காமல் வெறுத்தனர். இவள் கோயிலுக்கு வராமல் செய்ய தந்திரமாக திட்டம் வகுத்தனர். எம்பெருமானின் ஆரம்(தங்கநகை) காணவில்லை. அதை எடுத்தவள் வெங்கமாம்பாவே என்பதில் ஐயமில்லை என கொடும் பழியைச் சுமத்தினர். அன்று முதல் கோயிலுக்கு வரக் கூடாது. எங்கும் அவள் தென்படக்கூடாது என்று தடைவிதித்தனர். செய்யாத பழியை ஏற்றாள். திருமலை வேங்கடேசன் திருவுள்ளம் என்று கனியுமோ அன்றே வருவேன் என காட்டில் புகுந்து வாழ்ந்தாள். அவளின் தெய்வீக அழகைக் கண்ட வேடுவர்கள், தங்களிடத்தில் தங்கியிருக்க வேண்டுமென அன்புடன் ேகட்டுக் கொண்டனர்.

அவர்கள் அன்புக்கு கட்டுப்பட்டு, அவர்களுடன் தங்கியிருந்தாள். லட்சுமி நரசிம்மர் பெருமைகளை கதையாக அம்மக்களுக்கு எடுத்துக் கூறினாள். சிறுவன் பிரகலாதன் கூக்குரலுக்கு தூணைப் பிளந்து வந்தவன், அருமையை தன்னை மறந்து விவரித்தாள். இரண்யனை வதைத்த பின்னர் சினம் தணியாமல் ஆக்ரோஷத்துடன் துடித்த துடிப்பை வேடுவ குலத்தைச் சார்ந்த செஞ்சுலட்சுமி தாயார் ஆலிங்கனம் செய்து தணித்த மேன்மையையும் விளக்கினாள்.

அதையே காவியமாக முனைந்தாள். மலையில் வாழும் மக்களின் வாழ்க்கை முறையை, அவர்களுடைய பழக்க வழக்க ஆச்சார நியதிகள். தெய்வத்திடம் கொண்ட தீவிர பக்தி இவற்றை எல்லாம் உடனிருந்து அனுபவித்த உண்மைகள் அத்தனையும் கண்டு அறிந்தவள், நரசிம்மனின் அன்புக் குரிய வேட்டுவ பெண் ‘செஞ்சு’ தாயாரின் அருட்கடாட்சத்தைப் பெற்று, ‘செஞ்சு’ நாடகம் இயற்றினாள். தினமும் திருவேங்கட முடையானை காணத் தொடர்ந்து திருத்துழாய் மாலையை (தும்புறு குகையிலிருந்து) சாற்ற வேண்டி தும்புறு குகையிலிருந்து, திருவேங்கட நாதன் சந்நிதானத்திற்கு சுரங்கம் அமைத்தாள். அவ்வழியாக, திருமாலை திருத்துழாய் சாற்றம் கைங்காய பணியை நிறுத்தாமல் செய்து வந்தாள். இச்செயல் ஆறு ஆண்டுகள் தொடர்ந்தன.

கோயிலில் தினமும் இரவில் மாலையை சாற்றுவது யாரென்று தெரியாமல் திகைத்தனர். இறுதியில் பிரிட்டிஷ் அதிகாரி, பூஜை மேற்கொள்பவர் நிச்சயம் கண்டு பிடித்து கூறவேண்டுமென ஆணையிட்டார்.வேதியர்கள் குழுக்களாக கலந்து இரவில் எம்பெருமான் சந்நிதானத்தில் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டன. பல நாட்களுக்கு பின் வெங்கமாம்பா, இவ்வாறு மாலை சாற்றுவதை அறிந்தனர். தங்கள் செய்த தவறுக்கு வருந்தி மன்னிப்பு கோரினார். மீண்டும் திருமலைக்கு எழுந்தருள வேண்டுமென்று விண்ணப்பித்தனர் வேடுவர்கள். வெங்கமாம்பாவை அனுப்ப மறுத்தனர்.

அச்சமயம் அன்னமைய்யா வம்ச வழியில் வந்த குடும்பத்தினர், தங்கள் வீட்டில் தங்கி இருந்து கீர்த்தனைகள் இயற்ற வேண்டுமெனக் கேட்டுக் கொண்டதுடன், எம்பெருமானுக்குச் சேவை ெசய்ய தம் குடும்பத்தினருக்கும் பங்களிக்குமாறு வேண்டினர். அவருடைய அன்பைத் தட்டிக்கழிக்க இயலாமல் ஒப்புக் கொண்டாள். பின்னர், அன்னமைய்யாச்சாரியாருடைய வீட்டிலிருந்து கீர்த்தனைகள் எழுதினார். அவர் அங்கே தங்கி இருப்பது பிடிக்காத பக்கத்து வீட்டு தீட்சிதர் மனம் குமைந்தார்.

ஒருநாள் வெங்கமாம்பா, வெங்கடேச சுவாமி மீது கீர்த்தனைகளை பாடிய வாறு கிணற்றடியில் மதிய வேளையில் நின்றிருந்தாள். பக்கத்து இல்லத்து தீட்சிதர், பகல் உணவு முடித்து எச்சில் வாழையிலையை வீச வந்தவர். முன்வினை துரத்த செய்த பாவங்கள், சாபங்கள் ஒன்று திரண்டு அவருடைய உள்ளத்தில் புகுந்தது. அறிவு மங்கியது. ‘தான்’ என்ற ஆணவம் தலைத்தூக்க கேவலம் ஒரு பெண் கீர்த்தனைகள் புனைவதா? போற்றுமா? என காழ்ப்புணர்ச்சி நெஞ்சில் (புகுந்து) நுழைந்து சதுராட்டம் ஆட எச்சில் இலையை அவள் முகத்தில் வீசி எறிந்தார்.

எம்பெருமானை உள்ளம் நிறைந்து (நிரப்பி) மனக்கண்ணாக, சௌந்தர்ய அழகைக் கண்டு ஆராதித்து பாடிக் கொண்டிருக்கையில், எச்சிலை தன் மீது வந்து விழுந்தது. வெங்கடேசன் மீதே விழுந்தது போல பதறி திரும்பி, தீட்சிதரை நோக்கினாள். அக்கண்களில், தென்பட்ட சினம், பெண் வேங்கையில் கோபத்தைப் போன்று கண்ணின் தீட்ஷிதை உடலெங்கும் பரவி எரிந்தது.தன் தவற்றை அறிந்தார். ``ஐயோ! முன்வினை செய்த பாவமோ! தாயே! கருணைகாட்டம்மா’’ என்று பதறினார் தீட்சிதர். ``உன் குடும்பத்தில் ஒரு வாரிசு மட்டும் உயிர் வாழும் மற்ற அனைவரும் தீக்கிரையாவீர்’’ என மொழிந்தாள். பொறுமையில் பூமாதேவியாக விளங்கியவளுக்கு இத்தகைய சினம் எங்கிருந்து வந்தது? தன் பெருமாள் மீது வீசியதாகக் கருதியே தாய்மையை மறந்தாள்.

அபசாரப்பட்டதை மட்டுமே நெஞ்சில் கனலாக கொழுந்து விட்டு எரிந்தது. கொடுத்தாள் சாபம். செய்த வினையின் கர்மம் தொலைக்க வேண்டிய காலத்தில், எது நடக்கிறதோ அது நிச்சயம் நடந்தே தீரும். அவ்வாறே தன் வினைப்பயன் முன்னே வந்து நின்று, அக்குடும்பமே சாபம் பெற்றது. வெங்கமாம்பா வாழ்வில் துன்பத்தையே ஏற்றாள். தளரவில்லை. ஜென்மம் 9 பெற்ற பயன் இறைவனை, திருமாலை, அவன் நாமத்தைச் சொல்லியும், பஜனை செய்தும், நம் கர்மத்தைத் தொலைத்தும் அவன் புகழைப் பாடுவதையே பிறவி எடுத்ததன் பயன் ஆகும்.

(தொடரும்)

பொன்முகரியன்

Related Stories: