- இந்தியா
- பாகிஸ்தான்
- தக் லைஃப் இசை விழா
- கமல்ஹாசன்
- சென்னை
- மணிரத்தினத்தால்
- சிம்பு
- திரிஷா
- ஜோஜு ஜார்ஜ்
- பாகிஸ்தான்...
சென்னை: மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தக் லைஃப்’. மே 16ம் தேதி இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடத்த திட்டமிடப்பட்டது.
தற்போது நாட்டின் எல்லையில் இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில் இசை வெளியீட்டு விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் சொல்லியிருப்பதாவது, ‘‘நம் நாட்டின் எல்லையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும், தற்போதைய பதற்றமான சூழ்நிலையையும் கருத்தில் கொண்டு வரும் மே 16ம் தேதி திட்டமிடப்பட்ட ‘தக் லைஃப்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவை மாற்றியமைக்க முடிவு செய்துள்ளோம்.
புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும். நமது தாய்நாட்டைப் பாதுகாக்க எல்லைகளில் துணிவுடன் நிற்கும் நம் வீரர்களின் தியாகத்திற்கு மத்தியில் இது கொண்டாட்டத்திற்கான உகந்த நேரமல்ல, மாறாக அமைதியான, ஒற்றுமையை வெளிப்படுத்த வேண்டிய தருணம் என நாங்கள் நம்புகிறோம். இந்த நேரத்தில், நாட்டைப் பாதுகாக்கும் நமது ஆண், பெண் ஆயுதப் படை வீரர்களுடன் நமது நினைவு இருக்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.