உத்திராயனம் தட்க்ஷிணாயனம் என்றால் என்ன?

“உத்திர” என்கிற சமஸ்கிருதச் சொல்லுக்கு வடதிசை என்பது பொருள். அயனம் என்பது, காலத்தைக் குறிக்கிறது. சூரிய பகவான், தென்திசையிலிருந்து வடதிசையை நோக்கிச் சஞ்சரிப்பதையே உத்திராயனம் என்கிறோம். தை மாதத்திலிருந்து ஆனி மாதக்காலம் வரை உத்திரயாயனக் காலங்களாகும்.

“தட்க்ஷிண” என்றால் தென்திசை என்பது பொருள். அதாவது சூரியபகவான் வடதிசையிலிருந்து தென்திசை நோக்கி சஞ்சரிப்பதையே தட்க்ஷிணாயனம் எனக் குறிப்பிடுகிறோம். ஆடி மாதம் முதல் மார்கழி மாதக்காலம் வரை தட்க்ஷிணாயனக் காலமாகும். இது தேவர்களுக்கு இரவுப் பொழுதாகவும், மார்கழி மாதமே விடியற்காலையுமாகும்.

Related Stories: