காளை தாண்டும் வழிபாடு!

சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த தும்பல் கிராமத்தில் பழமையான பெரிய மாரியம்மன் கோயில் மற்றும் பெருமாள் கோயில்கள் உள்ளன. இக்கோயில் தேர்த் திருவிழாக்களை இன்றளவும் பாரம்பரிய முறைப்படிகிராம மக்கள் கொண்டாடி வருகின்றனர்.பெருமாள் கோயில் பூஜையின் போது தரையில் படுத்து தவம் கிடக்கும் பக்தர்களை கோயில் காளை தாண்டிச் செல்லும் ‘மாடு தாண்டும் திருவிழா’ மிகவும் பிரசித்தி பெற்றதாகும். கோயில் சந்நதியில் தரையில் படுத்துள்ள பக்தர்களை மிதிக்காமல் கோயில் காளை தாண்டிச்சென்றால், நேர்த்திக்கடன் நீங்கி, நினைத்தது நிறைவேறும் என்றும், காளை மிதித்து விட்டால் அந்த பக்தருக்கு தெய்வக்குற்றம் உள்ளதாகவும் இந்த கிராம மக்கள் இன்றளவும் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

‘கிராமத்தில் பெரிய மாரியம்மன் தேரோட்டம் நடைபெறும் போது, காவல் தெய்வங்களுக்கும் பொங்கலிட்டு சிறப்புப் பூஜை வழிபாடு நடத்துவோம். முதல் நிகழ்வாக, பெருமாள் கோயில் வளாகத்தில், கோயில் காளை தாண்டும் வினோத வழிபாடு நடைபெறும். முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வரும் கோயில் காளைக்கு பண முடிப்பு அணிவித்து மக்கள்

ஆசி பெறுவார்கள்.

பெருமாள் கோயில் அருகே தரையில் படுத்து கோயில் காளை தாண்டுவதற்காக பக்தர்கள் தவம் கிடப்பார்கள். பக்தர்களை மிதிக்காமல் காளைகள் தாண்டிச் சென்றால் நினைத்த காரியம் நிறைவேறுமென மகிழ்ச்சி அடைவார்கள்.காளை மிதித்து விட்டால் தெய்வக்குற்றம் இருப்பதாக கருது கின்றனர். வேறெந்த கிராமத்திலும் இல்லாத இந்த வழிபாட்டை கைவிடாமல், இன்றளவும் பாரம் பரிய விழாவாக கொண்டாடி வருகிறோம் என்கின்றனர்’ தும்பம் கிராம மக்கள்.

Related Stories: