இன்ஜினியர் ஆகும் யோகம்

இன்ஜினியரிங்கில் பல பிரிவுகள் உள்ளன சிவில், மெக்கானிக்கல், கெமிக்கல், ஆர்க்கிடெக்ட், எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ், ஏரோநாட்டிகல், மெரைன் என்று பல பிரிவுகள் உள்ளன. இந்த  பிரிவுகளின்படி கல்வி கற்கவும், தொழில் செய்யவும், வியாபாரம் செய்யவும் கீழ்க்கண்ட கிரக அமைப்புக்கள் இருக்க வேண்டும்.

மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம், ஆயில்யம், கேட்டை, ரேவதி, பூரம், உத்திரட்டாதி, அனுஷம் ஆகிய நட்சத்திரங்கள் பொறியியல் படிப்பிற்கு ஏற்றவையாகும்.

* ஜாதகத்தில் புதன், செவ்வாய் ஆகிய மூன்று கிரகங்களும் பலமாக இருக்க வேண்டும்.

* பிறந்த தேதி அல்லது கூட்டு எண் 5,14,23,8,17,26,9,18,27 ஆகிய தேதிகள் பிரகாசமானவை.

* லக்னத்திற்கு 4 க்குடையவன் 9 க்குடையவன் சேர்ந்தோ அல்லது தனித்தோ மேஷம், மிதுனம், கன்னி, விருச்சிகம் ஆகிய இடங்களில் இருக்க வேண்டும்.

* நான்காம் வீட்டிற்கும் பத்தாம் வீட்டிற்கும் ஏதாவது வகையில் தொடர்பு ஏற்பட வேண்டும்.

* B.ARACH ஆர்க்கிடெக்ட் பாடப்பிரிவில் சேருவதற்கு புதனுக்கும் லக்னத்திற்கும் சம்பந்தம் ஏற்பட வேண்டும்.

* சனிக்கும், புதனுக்கும் ஏதாவது வகையில் தொடர்பு ஏற்பட வேண்டும். புதனுக்கும், செவ்வாய்க்கும் தொடர்பு இருக்க வேண்டும்.

* சனி, செவ்வாய் சேர்க்கை பார்வை பரிவர்த்தனை சிறந்த மெக்கானிக்கல் இன்ஜினியர் ஆகலாம்.

இதில் குறிப்பிடப்பட்டுள்ள சில அமைப்புக்கள் உங்களுக்கு இருந்தால் பொறியியல் துறையில் படிப்பு அமையும். ஆடிட்டர் (கணக்குப் பாடம்) ஆகும் யோகம்

கணக்கு என்றாலே பலருக்கு பிணக்கு, பல கணக்குகளை சரிபார்த்து நுட்பமான உக்திகளை கையாண்டு. வருமான வரி, விற்பனை வரி, மற்றும் கணக்கு சம்பந்தமான அக்கவுண்டன்சி போன்றவற்றில் தேர்ச்சி பெறக் கீழ்க்கண்ட கிரக அமைப்புகள் தேவை.

ஆடிட்டர் என்ற கணக்குப் பாடத்திற்கு முதல் அஸ்திவாரமே லக்னம், லக்னாதிபதி இந்த  இரண்டும் பலமாக இருக்க வேண்டும். கார்த்திகை, உத்திரம், உத்திராடம், ஆயில்யம், கேட்டை, ரேவதி, அசுவினி, மகம், மூலம், ஆகிய நட்சத்திரங்கள் சிறப்பானவை. பிறந்த தேதி அல்லது கூட்டு எண் 5,14,23,4,13,22,6,15,24 ஆகிய தேதிகள் யோகமானவை. சூரியன், புதன் சேர்க்கை பெற்று லக்னம், நான்கு, எட்டு, ஒன்பது, பத்து ஆகிய இடங்களில் இருப்பது லக்னம், ராசி, நவாம்ச லக்னம், நவாம்சராசி ஆகியவை புதனின் சம்பந்தம் பெற்றிருப்பது.

நான்கு, ஒன்பது ஆகிய இடங்கள் மற்றும் அதிபதிகள் புதன் சம்பந்தம் பெறுதல். பத்தாம் இடம், பத்தாம் அதிபதி ஆகியோர் புதன் சம்பந்தம் பெறுவது ராசி

கட்டம் அல்லது நவாம்ச கட்டம். எந்த வகையிலாவது லக்னம், லக்னாதிபதி, ராசி, ராசியாதிபதி புதனுடன் சம்பந்தப்பட வேண்டும்.

Related Stories: