சட்டம் LAW வக்கீலாகும் யோகம்

சட்டப்படிப்பு என்பது மிக நுட்பமானது நாம் படித்த பல விஷயங்களை ஆராய்ந்து நமது மூளையில் பதிவு செய்து வேண்டிய விவரங்கள் நமக்கு தேவைப்படும் பொழுது கம்ப்யூட்டர் போல நினைவுக்கு வர வேண்டும். வக்கீல் படிப்பு, ஜீனியர், மூத்த வக்கீல், மாஜீஸ்திரேட், ஐகோர்ட் நீதிபதி, சுப்ரீம் கோர்ட் நீதிபதி என்று மிகப் பெரிய பதவி எல்லோராலும் மைலார்ட் என்றழைக்க கூடிய ஒரு மிகப்  பெரிய யோகம் படிப்பு படித்து வக்கீலாகவோ, நீதித்துறையிலோ பணிபுரிய கீழ்க்கண்ட கிரக அமைப்புகள் தேவை.

சட்டப்படிப்புக்கு அஸ்திவாரம் லக்னம், லக்னாதிபதி, இரண்டாம் இடம், இரண்டாம் அதிபதி இவர்கள் நல்ல பலத்துடன் இருக்க வேண்டும். வாக்கு காரகன் செவ்வாய் உச்சம், ஆட்சி, கேந்திரம், திரிகோணம் பெற்று பலமாக இருக்க வேண்டும். பிறந்த தேதி அல்லது கூட்டு எண் 1,10,19,28,3,12,21,30,17,26 ஆகிய தேதிகள் சிறப்பானவை.

கார்த்திகை, உத்திரம், உத்திராடம், புனர்பூசம், விசாகம், பூரட்டாதி, பூசம், அனுஷம், உத்திரட்டாதி போன்ற நட்சத்திரங்களில் பிறப்பது சிறப்பானது. இரண்டாம் இடம், ஐந்தாம் இடம், புதன், குரு போன்றவை ஒன்றுக்கொன்று தொடர்புடன் இருக்க வேண்டும். இரண்டாம் அதிபதி, ஐந்தாம் அதிபதி, ஒன்பதாம் அதிபதி, பத்தாம் அதிபதி ஆகியோர் பார்வை, சேர்க்கை, பரிவர்த்தனை பெற்றிருக்க வேண்டும்.

Related Stories:

>