CATARING உணவு சம்பந்தமான படிப்பு

பெரிய, சிறிய நட்சத்திர உணவகங்கள் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் கப்பல்களிலும் மிகப்பெரிய வேலை வாய்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் படிப்பு சாதாரண காபி, டிபன், சாப்பாடு வகைகளிலிருந்து வேறுபட்டு. இந்தியன், சைனீஸ், தந்தூரி, கான்டினென்டல், பேக்கரி, ஐஸ்கிரீம், உணவு பதப்படுத்துதல் எனப் பல பிரிவுகள் உள்ளது.

இந்த கல்வி பயில கீழ்க் கண்ட கிரக அமைப்புக்கள் தேவை. ஜாதகத்தில் சூரியன், செவ்வாய் இருவரும் ஏதாவது ஒரு வகையில் சம்பந்தம் ஏற்பட வேண்டும்.

ரோகிணி, அஸ்தம், திருவோணம், மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம், பரணி, பூரம், பூராடம் போன்ற நட்சத்திரங்கள் சிறப்பானவை. பிறந்த தேதி அல்லது கூட்டு எண் : 2,11,20,29,6,15,24,17,26,9,18,27 ஆகிய தேதிகள் யோகமானவை.

பத்தாம் இடத்திற்கு செவ்வாயின் சம்பந்தம் இருக்க வேண்டும். கூட்டுக் கிரக அமைப்பில் சுக்கிரன், சந்திரன், செவ்வாய் ஆகிய கிரகங்கள் 1,5,9,10 ஆகிய ஸ்தானங்களின் ஆதித்தியம் பெற்று ஒருவருக்கொருவர் சம்பந்தம் பெற வேண்டும்.

Related Stories: